|

உங்கள் கணனிக்கு Shutdown ற்கான Short cut key ஐ இலகுவாக உருவாக்க…

விண்டோஸ் கணனியின் இயக்கத்தை நிறுத்துவதற்கான Shutdown எனும் கட்டளைக்கு டெஸ்க் டொப்பில் ஒரு shortcut ஜக்கனை எவ்வாறு உருவாக்குவது எனத் தெரியுமா? அதற்குப் பின் வரும் வழி முறையைக் கையாளுங்கள்.

டெஸ்க்டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து New a Shortcut தெரிவு செய்யுங்கள் அப்போது தோன்றும் menu ல் The location of the item எனுமிடத்தில் Shutdown – S என type செய்து அடுத்த கட்டத்திற்குச் செல்லுங்கள்.

அடுத்த கட்டத்தில் விரும்பினால் உருவாக்கவிருக்கும் ஐக்கனுக்கு வேறு பெயரை வழங்குங்கள் அல்லது அதே பெயரையே default ஆக வைத்து கொண்டு menu ஐ முடிவுக்குக் கொண்டு வாருங்கள். இப்போது ஒரு shortcut ஐக்கன் டெஸ்க்டொப்பில் உருவாகியிருக்கக் காணலாம்.

இந்த ஐக்கனை இரட்டைக் க்ளிக் செய்ததுமே ஒரு message box தோன்றி முப்பது வினாடிகள் பின்னோக்கி எண்ணத் தொடங்கும். முப்பது வினாடிகள் முடிய கணனி இயக்கத்தை நிறுத்த ஆரம்பிக்கும்.

தவறுதலாக்shortcut ஐக்கனில் க்ளிக் செய்து விட்டால் shutdown கட்டளையை இல்லாமல் செய்வதற்கே இந்த 30 வினாடி தாமதம் வழங்கிய shutdown கட்ளையை இல்லாமல் செய்யவும (abort) டெஸ்ட்டொப்பில் ஒரு சோட்கட் ஐக்கனை நிறுத்தலாம்.

அதற்கு மேற் சொன்ன அதே வழியில் சென்று The location of the item எனுமிடத்தில் Shutdown – a என type செய்ய வேண்டும். அந்த ஐக்கனுக்கும் விருப்பமான பெயரிட்டு desktopல் நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தக் கட்டளைகள் Windows XPயில் மட்டுமன்றி Vista பதிப்பிலும் சிறப்பாக இயங்குகிறது.

Posted by Unknown on 3:31 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "உங்கள் கணனிக்கு Shutdown ற்கான Short cut key ஐ இலகுவாக உருவாக்க…"

Leave a reply

Blog Archive

Labels