மேஜிக்.. செய்து பாருங்கள்..



மேஜிக்-னாலே வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் பிடிக்குற ஒரு விஷயம். மேஜிக் பண்ணுறதை சின்ன பசங்க ஆச்சரியமா பார்ப்பாங்க. பெரியவங்க 'இதை எப்படி செய்யுறாங்க?' மூளையை கசக்கிக் கிட்டு யோசனை பண்ணுவாங்க.




இதோ, இந்த லின்க்-ல ஒரு மேஜிக் இருக்குது. செஞ்சு பாத்து என்ஜாய் பண்ணுங்க. இதுக்கு விடை தெரிஞ்சவங்க எப்படி என்று இங்கே சொல்லலாம்..  


10:19 PM | Posted in | Read More »

2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு!

நியூயார்க்: உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது.

உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது.
  Read:  In English
26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க்.

செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைஆண்டுதோறும் 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

12:37 PM | Posted in | Read More »

யு–ட்யூப் (YouTube) இல் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய இலகுவான வழி !!!

வீடியோ படங்களுக்கு யு–ட்யூப் ஓர் அருமையான தளம். நம் படங்களையும் அங்கு அப் லோட் செய்து உலகிற்குக் காட்டலாம். ஆனால் இவற்றை நாம் டவுண்லோட் செய்ய முடியாதபடி, யு ட்யூபில் இவை இடம் பெறுகின்றன. ஆனாலும் புரோகிராமர்கள், யு-ட்யூப் தளத்தில் உள்ள வீடியோ படங்களை டவுண்லோட் செய்திட பல புரோகிராம்களை இலவசமாகத் தந்து வருகின்றனர். 

11:01 AM | Posted in | Read More »

வேகமான Opera பிரவுசர் வெளியீடு

விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. http://www.opera.com/ என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.

இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம். புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.





10:56 AM | Posted in | Read More »

கூறிப்பிட்ட இணையம் பார்த்த தடவைகள் அறிய?

ஒரு ஆர்வத்திற்காக, அல்லது யாருக்காவது உங்கள் பிரியத்தைக் காட்டுவதற்காக, ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தை எத்தனை முறை பார்த்தீர்கள் என்று நீங்களே அறிந்து கொள்ள ஆவலா! பயர்பாக்ஸ் பிரவுசரை நீங்கள் பயன்படுத்தினால், இதனைத் தெரிந்து கொள்ளலாம்.

10:46 AM | Posted in | Read More »

Sixth Sense Technology - உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்

  Sixth Sense  ஆனது mini-projector உடன் camera வும் cellphone னும் இணைக்கப்பட்ட ஒன்றாகும்..



கை விரல்களாலே  இதனை இயக்க வேண்டும். இன்ரநெற் உடன் இணைப்பை கொண்டிருக்கும் இதனை உங்கள் கணனியுடன் இணைத்து தரவுகளை பரிமாரிக்கொள்ளலாம்.



இந்த Sixth Sense  இனால் பல வேலைகளை செய்ய முடியும் ..
நீங்க ஒரு Call எடுக்க போறீங்கள் என்றால் ஒருகையை விரித்தால் அதில் இலக்கங்கள் வரும் மற்ற கையினால் அதனை அழுத்தி விரும்பியவருடன் தொடர்புகொள்ள முடியும்.

எங்காவது டூர் போறீங்க போட்டோ எடுக்கனும் அதயும் இதாலே செய்யலாம். உங்க ரண்டு கையையும் பிடிக்கிறீங்க எப்டி போட்டோ எந்தளவும் போட்டோக்க அடங்கணும் என்னு அந்தளவும் தான் செய்ய வேண்டிது  அந்த போட்டோ இப்ப உங்க Databese ல இருக்கும்.

ஒரு சுப்ப மாக்கற்றிங்குக்கு போறீங்க உங்களுக்கு தேவையான சாமான்களை எடுத்து உங்களுக்கு முன்னாடி வச்சு பாத்தா போதும்.. அது நல்லதா கெட்டதா அதுல இருக்கிற பொருள்கள் என்னு எல்லாத்தையும் டிஸ்பிளேயில(Display) சொல்லிடும். இப்டி ஏகப்பட்ட வசதி இருக்கு Sixth Sense  ல. கீழ இருக்கிற வீடியோ இணைப்பில இன்னும் நிறைய பலன்கள் காட்டி இருக்காங்க கிளிக் பண்ணி பாருங்கோ...




..




2:35 PM | Posted in , | Read More »

அசர வைக்கும் மைக்ரோசாப்டின் Project Natal


பொதுவாகவே மைக்ரோசாப்டுக்கு பிற நிறுவனங்களை காப்பி அடித்து(reengineering செய்து) புதிய பிராடக்ட்கள் வெளியிடும் என்ற பெயர் உள்ளது.அந்த பெயரை மாற்றும் வகையில் தற்போது Project Natal என்ற புதிய முயற்சியில் இறங்கி உள்ளது.
கையின் அசைவுகளை கண்டு பிடித்து அதன் மூலம் வீடியோ விளையாட்டு கொண்டு வந்து Wii விளையாட்டு மாபெரும் புரட்சி செய்த்தது.மைக்ரோசாப்ட் நிறுவனம் அதை காப்பி செய்யாமல் தற்போது புதிய புரட்சிகரமான தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறைக்கான வீடியோ விளையாட்டுக்கான தொழில்நுட்பத்தில் இறங்கி உள்ளது.அதற்கு தான் Project Natal என்று பெயர்.

இந்த விளையாட்டை விளையாட எந்த சென்சார்கலையும் உடலில் அணிய வேண்டியது இல்லை. மேலும் மற்ற விளையாட்டை போல கையை மட்டும் பயன் படுத்த வேண்டியது இல்லை.நம் உடலின் அனைத்து பகுதிகளையும் விளையாட்டிற்கு பயன் படுத்தலாம். நம் உடலின் அசைவுகளை இன்ப்ரா ரெட் கேமரா மூலம் பல புள்ளிகளிலிருந்து கண்டறிந்து அதன் மூலம் கம்ப்யூட்டரின் உள் முப்பரிமான உருவம் செயற்கையாக வடிவமைக்கிறது. பிறகு நாம் செய்யும் அசைவுகள் அனைத்தையும் அந்த உருவத்தின் மூலம் செய்ய வைத்து உண்மையான விளையாட்டு போல் உணர செய்கிறார்கள்.

நான் கூறுவதை கேட்பதை விட மைக்ரோசாப்ட்டின் இந்த demo வீடியோவை நீங்களே பாருங்களேன்! இது Science Fiction படத்தை விட அருமையாக உள்ளது. உண்மையிலேயே நம்பவே முடியவில்லை.

2:19 PM | Posted in | Read More »

மீடியா பிளேயரில் சிடியில் எழுதலாம்

நீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறிவிட்டீர்களா? அப்படியானால் இந்த முக்கியமான வசதியைத் தெரிந்து கொள்ளுங்கள்.


அதில் உள்ள மீடியா பிளேயரில் உங்கள் சிடி மற்றும் டிவிடியில் டேட்டாவினை எழுதலாம். வீடியோ பைல்கள் மற்றும் படங்களையும் இதில் பதியலாம். எப்படி என்று பார்க்கலாமா!
ஆடியோ சிடியாக மாற்றுகையில், ஆடியோ அல்லது வீடியோ பைல்களின் பார்மட் மாற்றப்படுவதில்லை. தரமும் குறைவதில்லை.
முதலில் Start>All Programs>Windows Media Player எனச் செல்லவும். அதன் பின் பிளேயர் லைப்ரேரியில் Burn என்னும் டேப்பை கிளிக் செய்து பின் Date DVD அல்லது CD என்பதில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கவும்.
இனி காலியாக உள்ள சிடியை உங்கள் கம்ப்யூட்டரின் சிடி ட்ரேயில் போடவும். Auto Play டயலாக் பாக்ஸ் வந்தால் அதனை குளோஸ் செய்திடவும். சிலரின் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட சிடி டிரைவ் இருக்கலாம். இதில் எந்த டிரைவ் என்பதனையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அடுத்து எந்த பாடல் பைல்களைப் பதிய வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். எழுதப்பட வேண்டிய பாடல்களை Player Library ல் உள்ள Details pane லிருந்து வலது பக்கம் உள்ள List Pane ல் போடவும். இங்கே நீங்கள் விரும்பும் வகையில் பாடல்களின் வரிசையை மாற்றலாம்.
இந்த லிஸ்ட்டிலிருந்து பாடல்களை நீக்க வேண்டும் என்றால், இதில் ரைட் கிளிக் செய்து Remove என்பதில் கிளிக் செய்திடவும். லிஸ்ட் அமைப்பது முடிந்த பின் Burn கிளிக் செய்து சிடியில் பதிவதைத் தொடங்கி முடிக்கவும்.

2:09 PM | Posted in | Read More »

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!

விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.
பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.
விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.

2:08 PM | Posted in | Read More »

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு எச்சரிக்கை

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இணையதள பாதுகாப்பு நிறுவனமான சோஃபோஸ், எச்சரிக்கை விடுத்துள்ளது.


சமூக தளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் நட்பு வட்டாரத்திற்கு ஸ்பேம் தகவல் ஒன்றை அனுப்பும் மோசடி நடைபெற்று வருவதாக அது எச்சரித்துள்ளது.
லைக் ஜக்கிங் என பெயரிடப்பட்டுள்ள இந்த மோசடியில் பல்லாயிரக்கணக்கான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்கள் இரையாகியுள்ளனர் என்று சோஃபோஸ் நிறுவனம் தனது வலைப்பதிவுகளில் தெரிவித்துள்ளது.
இந்த மனிதர் கடந்த 8 ஆண்டுகளாக தன்னைத் தானே படம் எடுத்துக் கொள்கிறார் என்ற தகவலுடன் ஒரு செய்தி ஏராளமான ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனுடன் உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் அது ஊக்குவிக்கிறது.
அவ்வாறு கிளிக் செய்யும் போது, ஒரு வெற்றுப்பக்கம் தோன்றி, மேலும் தொடர இங்கே கிளிக் செய்யவும் என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
அதைக் கிளிக் செய்தால் மீண்டும் அதேபோன்றதொரு தகவல் வருகிறது. மேலும் இந்தத் தகவலை ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இதன் மூலம் இந்தத் தகவல் அனைவருக்கும் பரவி வருகிறது என்று சோஃபோஸ் எச்சரித்துள்ளது.
உங்கள் கம்ப்யூட்டரில் தானாகவே விளம்பரங்களை பதிவிறக்கம் செய்யும் மென்பொருள் ஒன்றை உங்களது கம்ப்யூட்டரில் பொருத்துவதற்கான ஒரு மோசடி ஃபேஸ்புக்கில் நடப்பதாக சோஃபோளூ; கடந்த வாரத்தில் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

2:07 PM | Posted in , , | Read More »

கூகுள் குரோம் அப்டேட் பைல் வடிவில் வைரஸ்!!!

குரோம் பிரவுசருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதனால், மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து அனுப்புபவர்கள், குரோம் எக்ஸ்டன்ஷன் என்ற பெயரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்களைத் தயாரித்து மறைமுகமாக அனுப்பத் தொடங்கி உள்ளனர்.

கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, தானாக ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் டாகுமெண்ட்ஸ் மற்றும் இமெயில் செய்திகளை கூடுதல் வசதியுடன் பார்க்க, குரோம் எக்ஸ்டன்ஷன் ஒன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதனைப் பெற இந்த லிங்க்கில் கிளிக் செய்யுமாறும் கூறப்படும். இந்த செய்தியை உண்மை என நம்பி, கிளிக் செய்தால், உடனே நாம் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவோம்.

அந்த தளம் கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன்களைத் தரும் தளம் போலவே தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்குப் பதிலாக, வேறு ஒரு புரோகிராம் தானாகக் கம்ப்யூட்டரில் பதியப்படும். இது ஒரு மால்வேர் புரோகிராம். கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, கம்ப்யூட்டரில் உள்ள பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க் அக்கவுண்ட் எண் போன்றவை, எடுத்து இந்த மால்வேர் புரோகிராமினை பரப்பியவருக்கு அனுப்பி வைக்கும். பின் அவற்றைப் பயன்படுத்தி, நிதி மோசடியில் இதனை அனுப்பியவர்கள் ஈடுபடுவார்கள்.

இந்த மால்வேர் புரோகிராம் வழக்கமான எக்ஸ்டன்ஷன் போலவே தோற்றமளிக்கும். அது உள்ள தளம், முகப்பு போன்றவை அப்படியே நம்மை ஏமாற்றும். உஷாரானவர்களாக இருந்தால், அந்த புரோகிராமின் துணைப் பெயர், எக்ஸ்டன்ஷனுக்கான '.crx' என்று இல்லாமல், '.exe' என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இதனை பிட் டிபன்டர் (Bit Defender) Trojan.Agent.20577 எனக் கண்டறிந்துள்ளது. இது பெர்சனல் தகவல்களைத் திருடுவதுடன், கூகுள் மற்றும் யாஹூ இணையப் பக்கங்களுக்கு நம்மைச் செல்லவிடாமல் தடுக்கிறது. குரோம் வெப் பிரவுசரில் எப்போது 'google.[xxx]' அல்லது '[xx].search.yahoo.com' என டைப் செய்தாலும், உடனே 89.149.xxx.xxx என்ற இன்டர்நெட் முகவரிக்கு நாம் தள்ளப்படுவோம். இதன் மூலம் நாம், இந்த திருட்டு புரோகிராமினை எழுதியவர்களின் இணைய தளத்திற்கே எடுத்துச் செல்லப்படுவோம்.
எனவே எக்ஸ்டன்ஷன் எது குறித்துத் தகவல் வந்தாலும், அது நமக்குத் தேவையா என்று ஒரு கணம் சிந்தியுங்கள். பின் அதனைத் தரும் தளம் சரியானதுதானா என்று சோதனை செய்திடவும். பைலின் பெயரை பலமுறை சோதனை செய்து அறியவும். உடனே அதனை அமல்படுத்தாமல், டவுண்லோட் செய்து வைத்து, அல்லது குறித்து வைத்து பின்னர் அது பற்றி முடிவெடுக்கவும். ஏனென்றால், பாதிக்கக் கூடிய எக்ஸ்டன்ஷன் எனில் உடனே இது குறித்த அறிவிப்பு இணையத்தில் கிடைக்கும்.




2:04 PM | Posted in , , | Read More »

autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க Panda Usb Vaccine

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டி வைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.
பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.
அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

2:03 PM | Posted in | Read More »

ஸென் எக்ஸ் 380 மற்றும் 390

இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போன்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையில் வருவதை முன்னிட்டு, ஸென் நிறுவனம் இரண்டு மாடல்களை, பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் (ரூ.1,399)இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய போனாக  எக்ஸ் 380 போன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு ஜி.எஸ்.எம். வகை சிம்களை இதில் பயன்படுத்தலாம்.   எம்பி3 மியூசிக் பிளேயர்,  எப்.எம். ரேடியோ, 2 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி,3,5 மிமீ ஆடியோ ஜாக், டி.எப்.டி. வண்ணத்திரை, எல்.இ.டி. டார்ச் மற்றும் வழக்கமான ஆர்கனைசர் வசதிகள் இதில் உள்ளன.   ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு தாக்குப் பிடிக்கிறது. நான்கு மணி நேரம் தொடர்ந்து பேச முடிகிறது. 500 முகவரிகளை இதன் அட்ரஸ் புக்கில் வைக்கலாம்.  300 எஸ்.எம்.எஸ். களை இதில் தேக்கிவைக்கலாம்.
ஸென் எக்ஸ் 390 மாடல் போன் ரூ.1,649 என விலையிடப்பட்டு கிடைக்கிறது. இதில் ஸ்டீரியோ  இசையுடன்  எம்பி4/எம்பி 3 பிளேயர், ரெகார்டிங் வசதியுடன் கூடிய வயர்லெஸ் எப்.எம்.,   1.5 அங்குல வண்ணத்திரை, விஜிஏ கேமரா, 3.5 ஆடியோ ஜாக்,500 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 300 எஸ்.எம்.எஸ். களைத் தேக்கி வைத்திடும் வசதி, 60 அழைப்புகளைக் கொண்ட கால் ரெஜிஸ்டர்  ஆகிய வசதிகளுடன் கேண்டி பார் வடிவில் உள்ளது. இதன் பரிமாணம் 102 து 42 து 13 மிமீ. 850 ட்அட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு குறைந்தது 4 மணி நேரம் பேசுவதற்கான திறனை அளிக்கிறது. யு.எஸ்.பி.போர்ட்  சார்ஜர் போர்ட்டாகவும்  பயன்படுகிறது.  சிறிய நகரங்களில் பட்ஜெட் போட்டு போன் வாங்கத் திட்டமிடும் மக்களை இலக்கு வைத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக இந்நிறுவனத் தலைவர் தீபேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

1:59 PM | Posted in | Read More »

கம்ப்யூட்டருக்குப் புதியவரா ..வேர்டில் பைண்ட் அண்ட் ரீப்ளேஸ்

ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம்.  வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சொல் ஒன்றுக்குப் பதிலாக இன்னொரு சொல் ஒன்றினைப் போட விரும்புகிறீர்கள். அப்போது கர்சரை ஒவ்வொரு லைனாக இழுத்துச் சென்று அந்த சொல்லைத் தேடி, அதை அழித்துவிட்டு மீண்டும் புதிய சொல்லை டைப் செய்வது நம் நேரத்தை வீணடிக்கும் செயலாக இருக்கும். இதற்கெனவே  வேர்ட் தொகுப்பில் Find and Replace என்றொரு வசதி உள்ளது. முதலில் அந்த சொல்லைத் தேட வேண்டிக் கொடுக்கும் கட்டளையைப் பார்க்கலாம். இதற்கு Edit  மெனு சென்று அதில்  Find கட்டளையைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதற்கென உள்ள  Ctrl+F என்ற ஷார்ட் கட் கீயைப் பயன்படுத்தவும். இப்போது எந்த சொல்லைத் தேட என்று கேட்டு அதற்கென ஒரு நீள் கட்டம் இருக்கும். அதில் கர்சர் துடித்துக் கொண்டிருக்கும். அதில்  தேடி அறிய வேண்டிய சொல்லை டைப் செய் திடலாம். இந்த சொல் 255 கேரக்டர்களுக்குள் இருக்க வேண்டும். இது ஒரு எழுத்தாகவோ, சொல்லாகவோ அல்லது நிறுத்தக் குறிகளாகவோ, ஸ்பெஷல் கேரக்டர்க ளாகவோ இருக்கலாம். அதன்பின்  Replace  என்ற கட்டத்தில் எந்த சொல்லைப் புதிதாய் அமைக்க வேண்டுமோ அதனை டைப் செய்திடலாம். பின்னர் கீழே உள்ள கட்டங்களில் Next என்ற கட்டத்தில் கிளிக் செய்தால், அடுத்த   சொல் இருக்குமிடத்தில் கர்சர் செல்லும். நீங்கள் விரும்பினால், அந்த சொல்லுக்குப் பதிலாக, புதிய சொல்லை அமைக்க,   Replace   என்பதில் அழுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இடமாக அந்த சொல்லைத் தேடித்தேடி மாற்றி அமைக்காமல் அனைத்து இடங்களிலும் அமைக்க முடிவு செய்தால்    Replace All என்பதில் கிளிக் செய்தால் போதும்.  உடனே அனைத்து இடங்களிலும் தேடி, அறிந்த சொல்லுக்குப் பதிலாக புதிய சொல் அமைக்கப்பட்டு டாகுமெண்ட் ரெடியாகும்.

1:57 PM | Posted in | Read More »

சில சாஃப்ட்வேர் ரகசியங்கள்

உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும்.

விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.

டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்: நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும்  அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.  ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி  (Windows+P) கீகளை அழுத்தவும்.
ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.


ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.
தானாக அப்டேட்: விண்டோஸ் அப்டேட் வசதியைப் பயன்படுத்துகையில், அது உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ரீஸ்டார்ட் செய்திடக் கட்டாயப்படுத்தும். அப்போதுதான், அப்டேட் செய்யப்பட்ட வசதிகள், உங்களுக்குக் கிடைக்கும். அப்போது, நீங்கள் சேவ் செய்யப்படாத வேலை ஏதேனும் மேற்கொண்டிருந் தால், அது வீணாகும் வாய்ப்புகள் அதிகம். இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க, கண்ட்ரோல் பேனலில்,   Windows Update  திறக்கவும். இதில் Change Settings என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில்  Download updates but let me choose whether to install them  என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டருக்குச் செல்ல, விண்டோஸ் எக்ஸ்புளோரர் சென்று, பின் அந்த போல்டர் இருக்கும் டைரக்டரி சென்று,  அந்த போல்டரை மவுஸால் தேடி, கிளிக் செய்து பெறுகிறீர்களா? அதற்குப் பதிலாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக அந்த போல்டரைத் திறந்த நிலையில் இருந்தால், நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? அப்படியும் செட் செய்திடலாம். உங்களுடைய டாஸ்க் பாரில் எக்ஸ்புளோரர் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்பதில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் என்பதனத் தேர்ந்தெ டுக்கவும். இதில் உள்ள டார்கெட் பீல்டில்,  ‘%windir%\explorer.exe’என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் விட்டு பைலுக்கான பாத் அமைக்கவும். அது ‘%windir%\explorer.exe C:\Users\yourusername\  என அமையலாம். இவ்வாறு அமைத்த பின்னர், விண்டோஸ் எக்ஸ்புளோரர், நேராக நீங்கள் விரும்பும் போல்டரைத் திறந்து,நீங்கள் வேலை செய்திடத் தயாராகக் காட்டும்.


போல்டர் வியூ: எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப் படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து  Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின்  Folder and search options  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.   இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (ஈஞுஞூச்தடூt) போல்டராக அமைந்துவிடும்.
டச்பேட்: இது குறித்து சென்ற இதழில் குறிப்புகள் தரப்பட்டன. லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ்  (Touch Freeze)  என்ற சிறிய புரேகிர õமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.


யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்: யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்.  விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர்  (Hardware)  என்னும் டேப்பில் கிளிக் செய்து   இங்கு  மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ்  (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ்  Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில்  Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.

மீண்டும் குயிக் லாஞ்ச் பார்: விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் அறிமுகப் படுத்தினாலும், பழைய சில பயனுள்ள விஷயங்களை விட்டுவிட்டது. அதில் ஒன்று குயிக் லாஞ்ச் பார். அதிர்ஷ்டவசமாக, இதனை மீண்டும் இதில் கொண்டு வருவது மிக எளிதான ஒரு வழியாக உள்ளது. டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். இதில்  Lock the taskbar என்பதில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். பின் மீண்டும் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில்  New toolbarஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் %appdata%\Microsoft\Internet Explorer\Quick Launchஎன்ற பைல் பாத் என்பதற்கான இடத்தில்  டைப் செய்திடவும். பின்னர் இதில் வலது பக்கம் உள்ள அம்புக் குறி பட்டனில் கிளிக் செய்து, அந்த போல்டருக்குச் செல்லவும்.குயிக் லாஞ்ச் மீண்டும் செயல்பாட்டிற்குக் கிடைக்கும்.
""கவனத்திற்கு''  இணையத்தில் 
ஸ்பேஸ் பார்   (Spacebar) – இணைய தளத்தில் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம்
ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (ShiftSpacebar)– இணைய தளத்தில் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம்.
கண்ட்ரோல் + எப்  (Ctrl+F)  : சொல்ல் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிக்க பயன்படும் விண்டோ திறக்கப்படும்.
ஆல்ட்+என் (AltN) இணைய தளத்தில் கண்ட்ரோல் + எப் அழுத்தி சொல் தேடுகையில் அந்த சொல்லின் அடுத்த நிகழ்வினைக் காண
கண்ட்ரோல்+டி (Ctrl+D) : புக்மார்க் பக்கத்திற்குச் செல்லலாம்
கண்ட்ரோல் + ட்டி (Ctrl+T) : புதிய டேப் திறக்கப்படும்
கண்ட்ரோல் + கே (Ctrl+K): சர்ச் பாக்ஸுக்குச் செல்ல
கண்ட்ரோல் +எல்  (Ctrl+L): அட்ரஸ் பாக்ஸுக்குக் கர்சரைக் கொண்டு செல்ல
கண்ட்ரோல் + (Ctrl+ +) : டெக்ஸ்ட் அளவை அதிகரிக்க
கண்ட்ரோல் + – (Ctrl+ –): டெக்ஸ்ட் அளவினைக் குறைக்க
கண்ட்ரோல் + டபிள்யூ (Ctrl+ W)டேபினை மூட G¨ 5 (F5)  : பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மீண்டும் லோட் ஆகும்.
ஆல்ட் + ஹோம் (AltHome): ஹோம் பேஜ் செல்லலாம்.
""கவனத்திற்கு''
குயிக் லாஞ்ச் (Quick Launch) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன் படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.

1:54 PM | Posted in | Read More »

ஆபாச தளங்களுக்கு தனி டொமைன்

 இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுxxxக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.
2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பு  காரணமாக இந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் xxx டொமைனுக்கான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததைத் தொடர்ந்து தற்போது xxx டொமைனை அனுமதிப்பது என்ற முடிவை ஐசிஏஎன்என் எடுத்துள்ளது.
இதையடுத்து இனிமேல் செக்ஸியான, ஆபாசமான படங்களையும், செய்திகளையும் கொண்ட தளங்கள் xxx என்ற டொமைனில் தனியாகவே இயங்கும்.

இங்கு நாம் சொல்ல வருவது இந்த கேடுகெட்ட செய்தியை அறிமுகம் செய்ய அல்ல. சில குறிப்பிட்ட தளங்களை நமது கணினியில் தடை செய்ய மென்பொருள்கள் உள்ளது அதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.

1:50 PM | Posted in | Read More »

கணனியில் local driveவை மறைக்க


உங்கள் கணனியிலிருந்து உங்கள் Folders & Files அழிக்கப்படுகின்றாதா.. அதற்க்காக நீங்கள் உங்கள் கணனியின் Folderரை மறைப்பதைவிட உங்கள் வன்தகட்டை (Hard Disk) மறைப்பது சிறந்தது .. இதற்க்காக நீங்கள் உங்கள் கணனி Registryயில் சிறு மற்றத்தை செய்தால் போதும்.. 


Start ----> Run ----> Typy regedit

இப்போது உங்களுக்கு Registry Editor; Openஆகும். இதில் கீழ்காணும் முறைப்படை கோப்புக்களை கடந்து சென்று .............

Hive: HKEY_CURRENT_USER
Key: Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

இதில் Right Click செய்து New ---> DWORD Valueஒன்றை உருவாக்கவும் அதற்கு NoDrives என பெயரிடவும்.

இதில் நீங்கள் மறைக்கவேண்டிய local drive ஒவ்வென்றிற்கும் ஒவ்வொரு Value உண்டு
eg. A=1, B=2, C=4, D=8, E=16, F=32, G=64, (D: & E:,யை மறைக்க 8+16=24. என இடவேண்டும்.)

இவ்வாறு செய்ததன் பின் My Computerரை Open பன்னி பார்க்வும். இப்போது உங்கள் கணனியில் நீங்கள் மறைத்த local drive இருக்காது.

நீங்கள மறைத்த local driveல் நுழையவேண்டுமெனில் My Computerரின் Adress Barல் உங்கள் local drive (C: D: E: ) Typeவை செய்து enter பன்னவும்.

Note : சிலவேலை Windows XPயில் கணனியை Reboot பன்னிய பின்பே மறைக்கப்பட்டிருக்கும். ............. 



1:35 PM | Posted in | Read More »

Blog Archive

Labels

Recently Commented

Recently Added

பிரபல்யமான பதிவுகள்