மற்றவர்கள் முன் Google இல் கலக்க!!!
இன்று தேடியெந்திரங்களில் முதலிடத்தில் இருப்பது கூகிள் மட்டுமே, தினம் ஒரு தேடியெந்திரம் வந்தாலும் அவை கூகுளுக்கு முன்னர் தாக்குபிடிக்க முடியவில்லை, ஆனால் நாம் பல சமயங்களில் தேடலில் ஈடுபடும்போது தேவையற்ற பல முடிவுகளை தந்து நமக்கு எரிச்சலை ஏற்படுத்துவதும் உண்டு.இதனை தவிர்க்க நாம் தேடலின் அடிப்படையையும் சில எளிய வழிமுறைகளையும் பார்ப்போம்.
1)கூகுள் வழக்கமாக நிறுத்தற்குறிகளையும் (,.) குறியீடுகளையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, நீங்கள் குறியீடுகளை இட்டுத் தேடினாலும் அதனைத் தவிர்த்தே தேடி முடிவுகளை காண்பிக்கும்.(இதில் சில விதிவிலக்குகள் உண்டு, அதாவது நீங்கள் $ குறியை உபயோகப்படுத்தினால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், அதாவது nikhon 400 மற்றும் nikhon $400 ஆகிய இரண்டுக்கும் தேடல் முடிவுகள் வேறுபடும், அதே போல் c++, c# ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.)
2)நீங்கள் enge sellum intha paathai என டைப் செய்து தேடினால் அது paathai engae sellum இதற்கான முடிவுகளையும் சேர்த்தே காட்டும்,இதைத் தவிர்க்க நமது வார்த்தையை ஒரு (” ”) quote போட்டுத் தேடிப்பாருங்கள் அதே வரிசையில் உள்ள முடிவுகளை மட்டுமே காட்டும். எ.கா: “engeyum kaathal”.
3) நீங்கள் ஒரு குறிப்பிட்ட தளத்தில் உள்ள முடிவுகளை மட்டுமே பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் site:www.abcd.com/keyword இவ்வாறு டைப் செய்து தேடினால் அந்த தளத்திலிருந்து மட்டுமே முடிவுகள் காட்டப்படும், எ.கா:site:www.brothersoft.com/screen saver, இது அத்தளத்திலுள்ள ஸ்கிரீன்சேவருக்கான முடிவுகளைக் காட்டும்.
4)ஒரு வார்த்தைக்கு முன்னால் ஒரு மைனஸ் குறியிட்டு நடுவில் ஒரு இடைவெளி விட்டால் அது அந்த வார்த்தையை தவிர்த்துவிட்டு மற்ற முடிவுகளைத் தரும், எ.கா: anti-virus என டைப் செய்தால் அது சரியான முடிவுகளைக் காட்டும், ஆனால் anti- virus என டைப் செய்தால் அது மைனஸ் குறிக்கு பிறகு உள்ள வார்த்தையை தவிர்த்துவிட்டு antiக்கான முடிவுகளை மட்டுமே காட்டும்.
5) நீங்கள் இரு குறிப்பிட்ட சொற்றொடரை(sentence) பற்றித் தேடும்போது நடுவில் உள்ள வார்த்தையை மறந்துவிட்டால், அந்த வார்த்தைக்கு பதிலாக ’*’ குறியினை இட்டுத் தேடவும் முடிவுகள் மிக நெருக்கமாக அமையும்,
எ.கா: statue * of cocaine என்பது statue progress of cocaine என்பதற்கான முடிவுகளைத் தரலாம்.
6)ஒரு வார்த்தைக்கான தேடலை நீங்கள் செய்யும்போது கூகுள் அந்த வார்த்தையின் பொருளையும் அறிந்து அதற்கான தேடல் முடிவுகளையும் சேர்த்தே காண்பிக்கும், இதனை தவிர்க்க அந்த வார்த்தைக்கு முன்னர் ’+’
குறியினை சேர்க்கவும். நீங்கள் childcare என்று தேடினால் அது child care என்ற முடிவுகளையே காண்பிக்கும், இதைத் தவிர்க்க +child care என்று டைப் செய்து தேடவும்.