|

கூகுளின் புதிய பயனுள்ள வசதி – Search by Image

கூகுளில் உள்ள அனைத்து வசதிகளை விவரிக்க வேண்டுமென்றால் நடக்கிற காரியமில்லை. இவ்வளவு வசதிகள் இருந்தும் கூகுள் வாசகர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி ஏதாவது ஒரு பயனுள்ள வசதியை வெளியிட்டு கொண்டே இருப்பார்கள். அந்த வரிசையில் கூகுள் இமேஜில் புதிய வசதியாக Search by Image என்ற வசதியை வெளியிட்டுள்ளனர்.

நாம் ஏதாவது ஒரு புகைப்படத்தை நம் கணினியில் வைத்திருப்போம். அதே படம் அல்லது அதற்க்கு தொடர்பான படங்கள் வேறு அளவுகளில் நமக்கு தேவைபடும் பொழுது அந்த நேரங்களில் நாம் வைத்திருக்கும் படத்தின் குறிச்சொல்லை சரியாக கூகுளில் கொடுத்தால் அந்த படங்களை கண்டு பிடிக்க முடியும். குறிச்சொல் கொடுப்பதில் தவறு ஏற்ப்பட்டால் அந்த படங்களை கண்டறிய மிகுந்த சிரமம் எடுக்க வேண்டும். ஆனால் இனி இந்த பிரச்சினை இல்லை நாம் அந்த படத்தை கூகுள் இமேஜில் கொடுத்து தேடினால் அதற்க்கு சம்பந்தமான படங்களை வெவ்வேறு அளவுகளில் சுலபமாக பெற்று கொள்ளலாம்.
மற்றும் உங்களுடைய போட்டோவை கூகுளில் கொடுத்து தேடினால் உங்களுடைய போட்டோ எந்தெந்த தளத்தில் உள்ளது என சுலபமாக கண்டறியலாம். வலைப்பதிவர்கள் உங்களுடைய தளத்தில் உள்ள போட்டோவை யாராவது copy செய்து மற்ற தளங்களில் போட்டு இருந்தாலும் அந்த தளங்களையும் நமக்கு சரியாக கண்டுபிடித்து தரும்.
  • இந்த பயனுள்ள வசதியை பெற Google Image இணைய தளத்திற்கு செல்லவும்.
  • அங்கு நாம் குறிச்சொல் கொடுக்கும் இடத்தில் ஒரு கேமரா போன்ற புதிய ஐகான் இருப்பதை காண முடியும். அதில் க்ளிக் செய்யுங்கள்.

  • அந்த ஐகான் மீது க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு சிறிய விண்டோ open ஆகும். அதில் நீங்கள் தேட விரும்பும் படத்தின் URL தெரிந்தால் அந்த URL அங்கே கொடுத்து தேடவும்.
  • போட்டோ உங்களுடைய கணினியில் இருந்தால் Upload an Image என்ற லிங்க் க்ளிக் செய்து உங்கள் புகைப்படத்தை அப்லோட் செய்து தேடவும்.

உங்கள் புகைப்படத்தை டிராக்(Drag) செய்து இங்கு கொண்டு வந்தும் தேடலாம்.

உதவிக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்து கொள்ளுங்கள்.

Posted by Unknown on 3:44 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "கூகுளின் புதிய பயனுள்ள வசதி – Search by Image"

Leave a reply

Blog Archive

Labels