|

கணினியில் Install செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண…


நாம் கணினியில் பல கட்டண மென்பொருட்களை நிறுவி இருப்போம். உதாரணமாக OS, மைக்ரோசாப்ட் ஆபிஸ்,போட்டோசாப் போன்ற மென்பொருட்களை நம்முடைய கணினியில் கட்டாயம் நிறுவி இருப்போம். அதை நிறுவும் பொழுது அதற்க்கான சீரியல் எண்களை கொடுத்து இன்ஸ்டால் செய்து இருப்போம். ஆனால் அந்த சீரியல் எண்களை இப்பொழுது நம்மால் பார்க்க முடியாது. ஒருவேளை அந்த சீரியல் எண்களை நாம் குறித்து வைக்காமல் இருந்தால் கணினியில் ஏதேனும் பழுது ஏற்ப்பட்டால் திரும்பவும் நிறுவ அந்த சீரியல் எண் மிகவும் அவசியம். இது போன்ற சூழ் நிலையில் நமக்கு உதவத்தான் இந்த சூப்பரான மென்பொருள் உள்ளது.

  • இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளவும் இதை இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை நேரடியாக இயக்கலாம்.
  • அந்த மென்பொருளை Extract செய்து பின்னர் அதன் .exe பைலை ஓபன் செய்யுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.

  • அடுத்து Search என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். அடுத்து இன்னொரு விண்டோ ஓபன் ஆகும் அதில் Time counter ஓடி கொண்டிருக்கும். முடிந்ததும் ok என்ற பட்டன் வரும் அதை க்ளிக் செய்யவும்.
  • அவ்வளவு தான் உங்களுடைய கணினி ஸ்கேன் ஆகும். ஸ்கேன் ஆகி முடிந்ததும் உங்கள் கணினியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் தெரியும்.

  • இப்படி உங்களுக்கு கணியில் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள் வரும்.
  • உங்கள் கணினி மட்டுமல்லாது அலுவலகங்களில் உங்கள் கணினியோடு லோக்கல் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கணினியின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
  • அதற்க்கு local host என்ற இடத்தில க்ளிக் செய்தால் உங்கள் கணினியோடு இணைந்துள்ள மற்ற கணினியின் சீரியல் எண்களையும் அவர்களின் அனுமதியின்றி பார்த்து கொள்ளலாம்.

  • HKEY_LOCAL_MACHINE என்ற இடத்தில் மாற்றம் செய்தும் மற்ற கணினிகளின் சீரியல் எண்களை பார்த்து கொள்ளலாம்.
  • உங்களுடைய நண்பர்களின் கணினிகளில் நிறுவியும் அந்த சீரியல் எண்களை குறித்து வைத்தும் நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
  • இந்த அணைத்து வசதிகளையும் இலவசமாக நமக்கு வழங்குகிறது இந்த மென்பொருள்.
மென்பொருளை டவுன்லோட் செய்ய - Licence Crawler1.6.0.182

Posted by Unknown on 3:45 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "கணினியில் Install செய்துள்ள மென்பொருட்களின் சீரியல் எண்களை காண…"

Leave a reply

Blog Archive

Labels