8:58 AM | Posted by Unknown
இணையத்தில் பல சேவைகளை பெற்றுக் கொள்வதில் ஆர்வங்காட்டும் போது, அவற்றைப் பெறுவதற்கு Sign up செய்கையில் எமது மின்னஞ்சல் முகவரியை வழங்குவது கட்டாயமாகிறது. இதனால், எமது மின்னஞ்சல் பெட்டிக்கு வகைதொகையின்றி எரிதங்கள் எனப்படும் SPAM வர வாய்ப்பேற்படுகிறது. இதனைத் தடுப்படுதற்காக, 10 நிமிடம் மட்டும் செயற்படும் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரியை தரும் ஒரு இணையத்தளமொன்று உள்ளது.
இதனைப் பெறுவதற்கு எந்தவித Form உம் நிரப்பவேண்டியதில்லை. அவ்விணையத்திலுள்ள இணைப்பை கிளிக் செய்ததும் எமக்குரிய மின்னஞ்சல் முகவரி தரப்படும். 10 நிமிடங்களுக்குள் அந்த முகவரிக்கு எந்த மின்னஞ்சல் வந்தாலும் அவற்றைப் பார்க்க முடியும். ஏன் பதிலும் அனுப்ப முடியும். 10 நிமிடம் போதாதென்றால் இன்னும் 10 நிமிடம் கூட்டியும் கேட்கலாம். ஆக தற்காலிக முகவரியை உருவாக்கி இணையச் சேவைகளைப் பெறுவதால், எமக்கு SPAM தொல்லை இருக்காது.
http://10minutemail.com என்பதே இவ்விணையத்தள முகவரியாகும்.
Posted by Unknown
on 8:58 AM. Filed under
Mail
.
You can follow any responses to this entry through the
RSS 2.0.
Feel free to leave a response