|

மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை


அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி ‘சிப்’ இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இச் ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.

Posted by Unknown on 3:38 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "மனித மூளையை ஒத்த ‘சிப்’பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை"

Leave a reply

Blog Archive

Labels