|

கையெப்பம் இட நேரமில்லையா

மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல்லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண்டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இதனால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டுமே செலவாகும். ஒரு அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு ஒரு செய்தியை மேல்அலுவலரின் கையெப்பத்தோடு, அனுப்ப வேண்டுமெனில் சாதரணமாக கையெப்பம் இட்டோ அல்லது கையெப்பத்தை நகல் எடுத்து ஒட்டியோ அனுப்பி விட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டுமெனில் மேலே கூறியவாறு கையெப்பம்மிட்டோ அல்லது நகல் எடுத்தோ அனுப்புவது என்பது சிரமமான ஒன்றாகும். இதற்கு பதிலாக அனைவரின் டாக்குமெண்ட்களிலும் மொத்தமாக கையெப்பம் இட்டால் எவ்வாறு இருக்கும். இதனை செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.

தளத்திற்கான தரவிறக்க சுட்டி

ட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Upload & Go என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக உங்களுடைய கணினியில் உள்ள டாக்குமெண்ட்டினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்பானது இணையத்தில் பதிவேற்றப்பட்டு PDF பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் Sign என்னும் சுட்டியை அழுத்தி வேண்டியை கையெப்பத்தினை உருவாக்கி கொள்ள முடியும். எங்கு வேண்டுமெனிலும் நகர்ந்த்தி செல்லவும் முடியும். பின் வலது புறம் உள்ள மின்னஞ்சல் உள்ளீடு பெட்டியில் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Complete பொத்தானை அழுத்தவும்.

சில நொடிகளில் நீங்கள் உருவாக்கிய கையெப்பத்துடன், உங்களுடைய டாக்குமெண்ட் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பிடிஎப் கோப்பாக வரும். அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு நாம் உருவாக்கு கோப்புகளை எளிதாக பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தளத்தினை அனைத்து உலவிகளிலும் எளிதாக காண முடியும். மேலும் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும், ஐபோன்களிலும் கையாள முடியும். இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள பணம் ஏதும் செலுத்த தேவையில்லை, அனைத்தும் இலவசம் ஆகும். இதற்கென இந்த தளத்தில் கணக்கு ஏதும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

Posted by Unknown on 4:30 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "கையெப்பம் இட நேரமில்லையா"

Leave a reply

Blog Archive

Labels