2010-ன் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெர்க் தேர்வு!
நியூயார்க்: உலகளவில் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதராக ஃபேஸ்புக் சமூக இணையதளத்தின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கை 'டைம்' பத்திரிகை தேர்வு செய்துள்ளது.உலகளவில் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக இணையதளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. 500 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஃபேஸ்புக்கை ஆரம்பித்து, அதை வெற்றிகரமான வர்த்தகமாகவும் மாற்றியுள்ளார் இவர். இன்று இணைய உலகின் ஜாம்பவான் கூகுளே அச்சம் கொள்ளும் அளவுக்கு பேஸ்புக் வளர்ந்து வருகிறது.
Read: In English
26 வயதில் இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் இளைஞர் ஜுக்கர்பெர்க்தான். இதற்கு முன் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் இதே வயதில் டைம் பத்திரிகையால் உலகின் சிறந்த மனிதராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை விட 2 வாரம் இளையவர் ஜுக்கர்பெர்க்.
செய்தி மற்றும் கலாசாரத்தில் ஓர் ஆண்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களைஆண்டுதோறும் 'டைம்' பத்திரிகை தேர்ந்தெடுத்து கெளரவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது