காரின் தோற்றத்தை மாற்றக் கூடிய தொடுகைத் திரையுள்ள கார்..!
என்ன கலரில் கார் வாங்கலாம் என்று இனிமேல் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆம் தற்போது டொயோட்டாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காரில் அதன் தோற்றத்தினையே மாற்றக்கூடிய தொடுகைத் திரையுள்ள உடற்பாகம் காணப்படுகின்றது.
Fun-Vii என்பது Vehicle Interactive Internet என்பதன் சுருக்கமாகும். இந்தத் தொழினுட்பம் மூலம் காரின் சாரதியால் மட்டுமே அதன் வடிவங்களை மாற்றக்கூடிய தொடுதிரை உடற்பாகமுள்ள கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இக் காரின் சாரதியை அதன் கதவில் ஒரு செய்தியுடன் இந்தக் கார் வரவேற்கும். ஒரு நவீன தொலைபேசியோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு இந்தக் கார் செயற்படும்.
இது எதிர்காலத்தின் டொயோட்டாவின் பார்வையாக உள்ளது. இந்தக் காரினால் உள்ளே அல்லது வெளியே பலதரப்பட்ட படங்களை வெளிப்படுத்த முடியும்.
இன்னும் வேறு மின்னியல் டொயோட்டா கார்களும் வெளியிடப்பட்டுள்ளன. டொயோட்டா iQ இனை அடிப்படையாகக் கொண்டு ஒரு 4-இருக்கை மின்சார வாகனமான FT-EV III என்பது வெளியிடப்பட்டுள்ளது. இதில் லிதியம்-அயன் மின்கலம் உள்ளது. முழுமையாக மின்னேற்றப்பட்ட மின்கலத்தில் 65 மைல்கள்வரை பயணிக்கமுடியும்.
2012 இல் குறுகிய தூரத்திற்குப் பயணிப்பதற்குப் பொருத்தமான EV தொழினுட்பத்துடனான காரினையும் டொயோட்டா வெளியிட எண்ணியுள்ளது.
ஐதரசன் வாயுவைக் கொண்டு பயணிக்கும் வாகனமொன்றையும் டொயோட்டா அளவில் வர்த்தக ரீதியாக வெளியிடவுள்ளது. இந்த வாகனம் ஒரு குடும்பம் பயணிக்க போதுமாக ஒருக்குமேனவும் இதனை ஒருமுறை மின்னேற்றினால் 430 மைல்கள் டொயோட்டா பயணிக்க முடியுமெனவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Posted by Unknown
on 7:46 PM. Filed under
.
You can follow any responses to this entry through the RSS 2.0.
Feel free to leave a response