|

Windows Operating system lock செய்யவது எப்படி

கணினி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே windows operating சிஸ்ட்டத்தை சார்ந்தே உள்ளது. இதற்கு காரணம் கணினி பயனாளர்கள் பெருமளவில் windows operating சிஸ்ட்டதை பயன்படுத்துவதே காரணம் ஆகும். இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் operating சிஸ்ட்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் operating சிஸ்ட்டதை lock செய்யும் வசதி இல்லை. பொதுவாக பயனர் கணக்கு தொடங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும். அந்த கணினியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணினிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணினிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம் சில நேரங்களில் operating சிஸ்ட்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம். அதுபோன்று operating சிஸ்ட்டத்தினை lock செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது portable application ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளிடவும்.

கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் எந்த formatஇயங்குதளத்தை lock செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் lock செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது lock செய்யப்படும்.

நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை lock செய்தால், கடவுச்சொல் இட்டால் மட்டுமே open செய்ய முடியும். USB மூலமாக lock செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு விண்டோஸ் operating சிஸ்ட்டதை lock செய்வதன் மூலமாக பிறர் நமது கணினியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே lock செய்ய முடியும்.

Posted by Unknown on 8:45 AM. Filed under , , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "Windows Operating system lock செய்யவது எப்படி"

Leave a reply

Blog Archive

Labels