இசைச் சேவையை ஆரம்பிக்கும் Facebook…
Facebook நீண்டகாலமாகவே இசையைப்
புகுத்தப்போகின்றது என்ற வதந்தி நிலவிவந்த நிலையில் அடுத்தமாதம் Spotify,
MOG மற்றும் Rdio என்ற இசைச்சேவைகளை ஆரம்பிக்க இருக்கின்றது.
இது செப்ரெம்பர் 22இல் இடம்பெறும் Facebook இன் அபிவிருத்தி மாநாட்டில்
அறிவிக்கப்படும்.
இந்த சேவை அப்பிள் கூகிள் மற்றும் அமேசனின் முறையிலிருந்து மாறுபட்டுக்
காணப்படும். இது விளையாட்டுக்களையும் மென்பொருட்களையும் போன்ற அதே முறையில்
வெளிக்கொணரப்படும் தளமாகக் காணப்படும்.
Facebook தனது முன்னேற்றத்திற்காக ஏனையவர்களை இதற்குள் புகுத்துகின்றதா
அல்லது வேறு ஊடகங்களை அவற்றின் இசைத்தளத்தை மேம்படுத்த வித்திடுகின்றதா
என்பது தெளிவற்ற விடயமே.
மிகவும் விருப்பமானவற்றை Facebook இசைக்க விரும்பாது என்று சிலர்
கருதுகின்றனர். ஆகையால் இது தனது இசைத்தளத்தினை வேறு மூன்றாந்தரப்பு
அபிவிருத்தியாளர்களைக் கொண்டே செயற்படவைக்கும் என்கின்றனர் இன்னும் சிலர்.
இது இசைக்கும் அப்பால் வீடியோக்களையும் பார்க்கக்கூடிய நிலையை
ஏற்படுத்தலாம் என்ற வதந்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன.