Facebook ஐ அழிக்கப் போகிறோம் – Hacking குழு தகவல் – வீடியோ இணைப்பு
பிரபல பேஸ்புக் சமூக வலைத்தளத்தை
வரும் நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அழிக்கப் போவதாக இனந்தெரியாத ஹேக்கிங்
குழு ஒன்று கூறியுள்ளது. யூடியூப் மூலமாக இதை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அதில் அவர்கள் கூறியுள்ளதாவது…..
“உங்களுக்கெல்லாம் மிகவும் பிடித்த நடுத்தர தொலைத்தொடர்பு சேவையான
பேஸ்புக் விரைவில் அளிக்கப்பட்டு விடும். உங்கள் தனிப்பட்ட தகவல்கள்
பாதுகாக்கப்பட வேண்டுமானால் நீங்களும் பேஸ்புக்கை அழிக்கும் எமது
முயற்சிக்கு கைகொடுக்கலாம்” என அக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு அவர்கள் “ஆபரேஷன் பேஸ்புக்” என பெயரிட்டுள்ளனர். இத்
தாக்குதல் நடவடிக்கை நவம்பர் 5 ம் திகதி ஆரம்பமாகவிருக்கிறது என அவர்கள்
கூறியுள்ளனர்.
இது வரை காலமும் பேஸ்புக்கிற்கு தொல்லை கொடுத்து வந்தவர் ஸ்பாம் மன்னர்.
இவர் கடந்த வாரம் தான் நியூயோர்க் மெட்ரோபோலியன் காவற்துறையினரால் கைது
செய்யப்பட்டார்.
மேலும் அமெரிக்க போலீஸ் ஏஜென்ஸிக்களின் இணையத்தளங்கள் மீதான தாக்குதல்
நடவடிக்கை ஒன்றுக்கு Antisek எனும் ஹேக்கிங் குழுவினர் அண்மையில்
பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் இப்போது பேஸ்புக்கை அளிக்கப் போவதாக இந்த செய்தி
வெளியாகியுள்ளது