|

படித்தவுடன் மறைந்துவிடும் ரகசியமான மின்னஞ்சல் ?


மின்னஞ்சல் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல மின்னஞ்சல்  செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை.

அதாவது நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் மின்னஞ்சல் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது. இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான இணைய முகவரி ஒன்றை தருகிறது.
யாருக்கு மின்னஞ்சல் சென்று சேர வேண்டுமோ அவருக்கு இந்த இணைய முகவரியை மட்டும் அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் அழியே அல்லது மெசேஜிங் மூலம் இந்த ரகசிய குறியீட்டு முகவரியை அனுப்பலாம். இதனை பெறுபவர் மட்டுமே அதனை கிளிக் செய்து படிக்க முடியும். அவரும் கூட ஒரே ஒரு முறை தான் இந்த செய்தியை படிக்க முடியும். காரணம் அவர் படித்து முடித்தபிறகு இந்த செய்தி காணாமல் போய்விடும். அதாவது தன்னை தானே அழித்து கொண்டுவிடும்.
எனவே யாருக்கு அனுப்பபட்டதோ அவரை தவிர யாரும் இந்த செய்தியை படித்துவிட முடியாது. இந்த அளவுக்கு மிகவும் ரகசியமான மின்னஞ்சல் அனுப்பும் அவசியம் ஏற்படுகிறதோ இல்லையோ இப்படி படித்தவுடன் மறைந்துவிடும் மின்னஞ்சல் சேவையை சுவாரஸ்யம் கருதி பயன்படுத்தலாம்.
இத்தளத்துக்குரிய Link

Posted by Unknown on 5:14 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 comments for "படித்தவுடன் மறைந்துவிடும் ரகசியமான மின்னஞ்சல் ?"

Leave a reply

Blog Archive

Labels