நிறுவப்பட்ட மென்பொறுளை மீண்டும் மென்பொருளாக (.exe) மாற்ற..
நாம் கம்ப்யூட்டரில் மென்பொருட்களை Install செய்து விட்டு அதன் Setup.exe Fileஐ இடப் பற்றாக்குறையை எண்ணி அழித்து விடுவது வழக்கம். எப்பொழுதாவது, நண்பர்கள் கேட்கும் போதோ, நமக்கு தேவை ஏற்படும் போதோ அந்த மென் பொருளுக்காக அலைய வேண்டி இருக்கும். இது நம் ஒவ்வொருத்தரின் அனுபவத்திலும் கட்டாயம் நடந்திருக்கும். அந்த நேரங்களில் நாம் Install செய்த மென்பொருளையே Setup.exe Fileஆக (மென் பொருளாக) மாற்ற முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று நினைப்பதுண்டு.
நாம் எதை Install செய்திருக்கிறோமோ, அதை Setup.exe Fileஆக மாற்ற ஒரு வழி உண்டு. அதற்காக பணம் செலவளிக்க தேவை இல்லை. உங்கள் எல்லா கம்ப்யூட்டரிலும் நாம் ஃபைல்களை சுருக்க, விரிக்க பயன்படுத்தும் WinRAR எனும் மென்பொருளாகும்.
WinRAR Software தரவிறக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.
இந்த மென்பொருளை கம்ப்யூட்டரில் பதிந்த பின் நமக்கு எந்த மென்பொருளை Setup.exe Fileஆக மாற்ற வேண்டுமோ அந்த பைல் மீது Right Click செய்து, “Add to Archive” என்பதை கிளிக்க வேண்டும்.
இங்கு என் கணணியில் பதிந்துள்ள NHM Writter”ஐ மீண்டும் மென்பொருளை மாற்றப் போகிறேன். |
|
|
|
|
“Add to archive”ஐ கிளிக்கியதும் கீழுள்ளவாறு ஒரு Window திறக்கும்.
மேலுள்ள Window’இல் “general” Tabஇல் படத்தில் காட்டியுள்ளது போல் “Create SFX Archive” என்பதை தெரிவு செய்து “OK” ஐ தெரிவு செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் நீங்கள் தெரிவு செய்த இடத்தில் உருவாக்கப் பட்டு விடும்.
படத்தில் உள்ளது போல “Advanced”என்பதை தெரிவு செய்து பாஸ்வேர்ட்’ம் கொடுக்கும் வசதியும் இதில் உண்டு.