வேகமான Opera பிரவுசர் வெளியீடு
விண்டோஸ் இயக்கத்தில் இயங்குவதில் இதுதான் அதிவேக பிரவுசர் என்ற அடைமொழியுடன் களத்தில் இறக்கப்பட்டுள்ளது ஆப்பரா பிரவுசர் பதிப்பு 10.50. http://www.opera.com/ என்ற ஆப்பராவின் தளத்தில் இதனை டவுண்லோட் செய்திடலாம். இதில் தரப்படும் ஜாவா ஸ்கிரிப்ட் இஞ்சின் மற்றும் கிராபிக்ஸ் லைப்ரரி இரண்டும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் புதுமையானவையாகும்.இதனைப் பயன்படுத்துபவர்கள், எந்த இணைய தளத்திற்கும் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இதன் வடிவமைப்பு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் தற்போது மற்ற பிரவுசர்களில் அமைந்திருக்கும் பிரைவேட் பிரவுசிங் வசதியும் தரப்பட்டுள்ளது. வழக்கமான மெனு பாருக்குப் பதிலாக ரேடியோ பட்டன் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு புள்ளியை அழுத்துவதன் மூலம், ஆப்பரா தரும் அனைத்து வசதிகளையும் பார்த்து அறியலாம். புதிய தொழில் நுட்பம் முழுவதையும் இது சப்போர்ட் செய்வதால், கண்களைக் கவரும் வகையில் இணைய தளங்களை அமைப்பவர்கள், இந்த பிரவுசரில் அவை நன்றாகக் காட்டப்படும் என நம்பி அமைக்கலாம். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 தொகுப்புகளின் ஏரோ கிளாஸ் இந்த பிரவுசரில் சப்போர்ட் செய்யப்படுகிறது.
பயனுள்ள சிறப்பானப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
நிச்சயமாக... உங்கள் ஆலோசனைக்கு நன்றி நன்பரே..