ஆபாச தளங்களுக்கு தனி டொமைன்
இணையதளங்களுக்கான டொமைன்களை முடிவு செய்யும் ஐசிஏஎன்என் அமைப்பு, .xxx என்ற டொமைனுxxxக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.இதன் மூலம் செக்ஸியான, ஆபாசமான படங்கள், செய்திகள் அடங்கிய தளங்களை, இந்த டொமைன் மூலம் தனியாக இயக்கிக் கொள்ளலாம்.
2005ம் ஆண்டிலேயே இந்த xxx டொமைனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்புதல் திரும்பப் பெறப்பட்டது.
இந்த நிலையில் xxx டொமைனுக்கான தொடர் அழுத்தங்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததைத் தொடர்ந்து தற்போது xxx டொமைனை அனுமதிப்பது என்ற முடிவை ஐசிஏஎன்என் எடுத்துள்ளது.
இதையடுத்து இனிமேல் செக்ஸியான, ஆபாசமான படங்களையும், செய்திகளையும் கொண்ட தளங்கள் xxx என்ற டொமைனில் தனியாகவே இயங்கும்.
இங்கு நாம் சொல்ல வருவது இந்த கேடுகெட்ட செய்தியை அறிமுகம் செய்ய அல்ல. சில குறிப்பிட்ட தளங்களை நமது கணினியில் தடை செய்ய மென்பொருள்கள் உள்ளது அதனை நாம் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்.