ஸென் எக்ஸ் 380 மற்றும் 390
இரண்டு சிம் இயக்கம் கொண்ட மொபைல் போன்கள் தொடர்ந்து இந்தியச் சந்தையில் வருவதை முன்னிட்டு, ஸென் நிறுவனம் இரண்டு மாடல்களை, பட்ஜெட் விலையில் வெளியிட்டுள்ளது. மிகக் குறைந்த விலையில் (ரூ.1,399)இரண்டு சிம் பயன்படுத்தக் கூடிய போனாக எக்ஸ் 380 போன் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.இரண்டு ஜி.எஸ்.எம். வகை சிம்களை இதில் பயன்படுத்தலாம். எம்பி3 மியூசிக் பிளேயர், எப்.எம். ரேடியோ, 2 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மெமரி,3,5 மிமீ ஆடியோ ஜாக், டி.எப்.டி. வண்ணத்திரை, எல்.இ.டி. டார்ச் மற்றும் வழக்கமான ஆர்கனைசர் வசதிகள் இதில் உள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்தால் ஐந்து நாட்களுக்கு தாக்குப் பிடிக்கிறது. நான்கு மணி நேரம் தொடர்ந்து பேச முடிகிறது. 500 முகவரிகளை இதன் அட்ரஸ் புக்கில் வைக்கலாம். 300 எஸ்.எம்.எஸ். களை இதில் தேக்கிவைக்கலாம்.
ஸென் எக்ஸ் 390 மாடல் போன் ரூ.1,649 என விலையிடப்பட்டு கிடைக்கிறது. இதில் ஸ்டீரியோ இசையுடன் எம்பி4/எம்பி 3 பிளேயர், ரெகார்டிங் வசதியுடன் கூடிய வயர்லெஸ் எப்.எம்., 1.5 அங்குல வண்ணத்திரை, விஜிஏ கேமரா, 3.5 ஆடியோ ஜாக்,500 முகவரிகளைக் கொள்ளும் அட்ரஸ் புக், 300 எஸ்.எம்.எஸ். களைத் தேக்கி வைத்திடும் வசதி, 60 அழைப்புகளைக் கொண்ட கால் ரெஜிஸ்டர் ஆகிய வசதிகளுடன் கேண்டி பார் வடிவில் உள்ளது. இதன் பரிமாணம் 102 து 42 து 13 மிமீ. 850 ட்அட லித்தியம் அயன் பேட்டரி தரப்பட்டு குறைந்தது 4 மணி நேரம் பேசுவதற்கான திறனை அளிக்கிறது. யு.எஸ்.பி.போர்ட் சார்ஜர் போர்ட்டாகவும் பயன்படுகிறது. சிறிய நகரங்களில் பட்ஜெட் போட்டு போன் வாங்கத் திட்டமிடும் மக்களை இலக்கு வைத்து இந்த போன் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக இந்நிறுவனத் தலைவர் தீபேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.