எமது உள்ளூர் பஸ் சேவைகளில் பிரயாணம் செய்தவர்களுக்கு இதுபோன்றதொரு பஸ் கிடைத்தால் எப்படியிருக்கும்! 23 பயணிகள் மட்டும் பயணம் செய்யக்கூடிய இந்த பஸ்ஸில் சொகுசு கார்களில் பிரயாணம் செய்யும் அனுபவம் ஏற்படும்.
முன்புறமும், பின்புறமும் பார்பதற்கு கார் போலவே இருந்தாலும் நீளத்தில் புகையிரதம் போன்றது. 49 அடி நீளமான (15 metres) இந்த பஸ் 155 kmph எனும் அதியுயர் கதியில் செல்லவல்லது.
அத்துடன் தன்னியக்கமாக திறக்ககூடிய 8 கதவுகளையும் கொண்டுள்ளது. Holland இலுள்ள University of Technology இல் 1985 ஆம் ஆண்டே இதற்கான வடிவம் வரையப்பட்டதாகவும் இன்று தான் அது முழுமைபெற்றதாகவும் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிநுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. கையடக்கத் தொலைபேசித் தொழிநுட்பமானது இதில் குறிப்பிடத்தக்கது.
அந்ந வகையில் எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் எவ்வாறு இருக்கலாம் என்பதனை அலெக்ஸி சக்கனிகொவ் என்பவர் தனது கற்பனைத்திறன் மூலம் வித்தியாசமாக உருவாக்கிக் காட்டியுள்ளார்.
கைக்கடிகாரத்துடன் இணைந்ததாகவும் நவீன வசதிகள் அனைத்தையும் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மூளையுடனோ அவரது பார்வையுடனோ தொடர்புபடுத்தப்படவில்லை. புதிய வீடியோ விளையாட்டுத் தயாரிப்பாளர்களான Deus Ex எனும் நிறுவனத்தினருடன் இணைந்து செயற்பட்டு இப்புதிய கமெராக் கண்ணைப் பொருத்தியுள்ளார்.
2027 இல் உலகில் இவ்வாறான இயந்திரக் கண்களுடன் பலர் வீதிகளில் திரியலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருவியில் ஒரு கமெரா, கம்பியற்ற மாற்றி, மின்கலம் என்பன உள்ளடங்கின்றன. இவை றொப்பின் கட்கழிக்குள் வைக்கப்பட்டுள்ளன. இதற்கு 9மி.மீ. மட்டுமே தேவைப்பட்டது.
சிறுவயதில் ஒரு விளையாட்டின்போது தனது கண்ணை இழந்த றொப் 5 வருடங்களுக்கு முன்னர் கண்ணினையும் அகற்றியிருந்தார் இவரது கண்ணில் பொருத்தப்பட்டுள்ள கமெராவிலிருந்து காட்சிகள் ஒரு கையடக்கமான திரைக்கு மாற்றப்படுகின்றன. 3.2மி.மீ. சதுர அடியும் 328�250 பிக்செல் கொண்டதுமான சிறியதொரு கமெரா கலிபோர்ணியாவின் OmniVision நிறுவனத்தினரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது.
அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி ‘சிப்’ இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இச் ‘சிப்’ ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன. சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.
உங்கள் கணினியை ஒரு மவுஸ், ஒரு ஆளிப்பலகை மூலம் கட்டுப்படுத்தி நீங்கள் களைப்படைந்து விடீர்களா? ஒருவித்தியாசமான முறைளில் உங்கள் கணினியை இயக்கவே இந்த திட்டம். அதாவது உங்கள் கண்களையே அதற்கு உபயோகப்படுத்துங்கள்.
உங்கள் கண்களை பயன்படுத்தி கணினியை இயக்குவதென்பது கண்களுக்கு ஒரு அப்பியசமகவே அனைகிறது என்பதால் உங்கள் கண்களுக்கு ஏற்படக்கூடிய குறைபடுகளையும் இது குறைக்கிறது. அத்துடன் கணினியை இயக்க கண்களை பயன்படுத்துவதென்பது மவுஸை பயன்படுதுவதை விட இலகுவனதாக அமைகிறது.
Tobii Technology நிறுவனம் இந்த கண்களால் கட்டுப்படுதும் உலகின் முதலாவது மடிக்கணினியை அறிமுகம் செய்திருக்கிறது. இது இந் நிறுவனத்துடனான உருவனது.
இது மார்ச் 1-5 வரை ஹனோவரில் நடை பெற்ற நிகழ்வில் கட்சிப்படுத்தப்பட்டது. இம் மடிக்கணினி ஒரு கணினியை கட்டுப்படுத்துவதற்கன அதிக பயன் விளைவான வழியை கொண்டுவருவதை இலக்காக கொண்டுள்ளது
மிகப்பெரிய அலுவல்கள் சம்பந்தப்பட்ட ஈபேப்பர்களிலோ அல்லது அதிகமாக உள்ள ஆவணங்களிலோ கையெப்பம் இட வேண்டுமெனில் நாம் தனித்தனியாக கையெப்பம் இட முடியாது. இதனால் ஒரு கையெப்பத்தினை நகலெடுத்து அனைத்து டாக்குமெண்ட்களிலும் ஒட்டுவோம். இதனை நாம் இவ்வாறு செய்வதால் கால விரயமும் பணம் மட்டுமே செலவாகும். ஒரு அலுவலகத்தில் இருக்கும் பணியாளர்களுக்கு ஒரு செய்தியை மேல்அலுவலரின் கையெப்பத்தோடு, அனுப்ப வேண்டுமெனில் சாதரணமாக கையெப்பம் இட்டோ அல்லது கையெப்பத்தை நகல் எடுத்து ஒட்டியோ அனுப்பி விட முடியும். ஆனால் நாடு முழுவதும் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் செய்தி ஒன்றை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டுமெனில் மேலே கூறியவாறு கையெப்பம்மிட்டோ அல்லது நகல் எடுத்தோ அனுப்புவது என்பது சிரமமான ஒன்றாகும். இதற்கு பதிலாக அனைவரின் டாக்குமெண்ட்களிலும் மொத்தமாக கையெப்பம் இட்டால் எவ்வாறு இருக்கும். இதனை செய்ய ஒரு தளம் உதவி செய்கிறது.
ட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, Upload & Go என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக உங்களுடைய கணினியில் உள்ள டாக்குமெண்ட்டினை தேர்வு செய்யவும். சிறிது நேரத்தில் உங்களுடைய கோப்பானது இணையத்தில் பதிவேற்றப்பட்டு PDF பைலாக கன்வெர்ட் செய்யப்படும். பின் Sign என்னும் சுட்டியை அழுத்தி வேண்டியை கையெப்பத்தினை உருவாக்கி கொள்ள முடியும். எங்கு வேண்டுமெனிலும் நகர்ந்த்தி செல்லவும் முடியும். பின் வலது புறம் உள்ள மின்னஞ்சல் உள்ளீடு பெட்டியில் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Complete பொத்தானை அழுத்தவும்.
சில நொடிகளில் நீங்கள் உருவாக்கிய கையெப்பத்துடன், உங்களுடைய டாக்குமெண்ட் உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு பிடிஎப் கோப்பாக வரும். அதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ள முடியும். இவ்வாறு நாம் உருவாக்கு கோப்புகளை எளிதாக பிறருடன் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த தளத்தினை அனைத்து உலவிகளிலும் எளிதாக காண முடியும். மேலும் ஆன்ட்ராய்ட் மொபைல்களிலும், ஐபோன்களிலும் கையாள முடியும். இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள பணம் ஏதும் செலுத்த தேவையில்லை, அனைத்தும் இலவசம் ஆகும். இதற்கென இந்த தளத்தில் கணக்கு ஏதும் துவங்க வேண்டிய அவசியம் இல்லை.
அசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும் என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன் வடிவம் இருக்கிறது.
பொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச் செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை குறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும் உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம். நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன் தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம். இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ் அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.