கூகுள் கணக்கு இன்று இணையத்தில் உள்ளவர்களுக்கு மிக முக்கியமான ஒன்றாய் மாறிவிட்டது. நம்மில் பெரும்பாலானோர் மிக அதிகமான கூகுள் பயன்பாடுகளை பயன்படுத்துவோம். எல்லாமே மிக முக்கியமான தகவல் கொண்டவை. இதனால் நம் தகவல்கள் திருடப் பட வாய்ப்புகள் அதிகம். இந்த திருட்டுகளில் சில வித்தியாசமானவை. எப்படி கூகுள் கணக்கை பாதுகாப்பது என்று பார்ப்போமா?
அது என்ன 2-step verification?
இதனை ஆக்டிவேட் செய்வதன் மூலம் ஒவ்வொரு முறை நீங்கள் ஒரு புதிய கணினியில் இருந்து கூகிள் கணக்கை பயன்படுத்தினால் ஒரு கோட் ஆனது அலைபேசி க்கு குறுஞ்செய்தி ஆக அனுப்படும் அதை கொடுத்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.
இதனை செயல்படுத்த முதலில் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் “Using 2-step verification” என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது “Using 2-step verification” என்பதை சொடுக்கவும்.

இப்போது Start என்பதை கொடுக்கவும். அடுத்த பக்கத்தில் உங்கள் நாட்டை தெரிவு செய்து உங்கள் அலைபேசி எண் கொடுக்க வேண்டும். கூடவே Country Code ஆனது தொலைபேசி எண்ணுக்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டும். இந்தியாவிற்கு இது ௦ ௦0 or 91, உதாரணம்: 09876543210 .
இப்போது Send Code என்பதை சொடுக்கவும், உடனே உங்கள் அலைபேசியில் ஒரு செய்து கூகுள் இடம் இருந்து வரும். இதில் உங்கள் கோட் இருக்கும். இதனை அதே பக்கத்தில் கொடுத்து Verify செய்யவும். இதன் பின்னர் Next கொடுத்து அடுத்த பக்கம்.
நீங்கள் தற்போது பயன்படுத்தும் கணினியை நினைவில் வைத்து இருக்க வேண்டும் என்றால் அதில் “Remember Verification for This computer for 30 Days” என்பது தெரிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அடுத்த பக்கத்தில் Turn On 2-Step Verification என்பதைசொடுக்கவும்.
இப்போது அடுத்த பக்கத்துக்கு நீங்கள் வருவீகள்.
நீங்கள் இந்த வசதியை ON செய்து வைத்து இருந்தால் கீழே உள்ளவற்றுக்கு தனி கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும்.
- AdWords Editor
- Apps on smartphones such as Android, BlackBerry or iPhone
- Chrome Sync
- Mail clients such as Microsoft Outlook
- Chat clients such as Google Talk or AIM
ஏன் என்றால் இவற்றை நீங்கள் பயன்படுத்தும் போது கூகுள் கோட் எதுவும் அனுப்ப இயலாது.
இப்போது ஒரு குறிப்பிட்டபெயர் கொடுத்து ஒரு கடவுச்சொல் Generate செய்ய வேண்டும். இது கூகுள் தானாக உருவாக்கும் கடவுச்சொல் நாம் மாற்ற இயலாது.
கவனிக்க இந்த கடவுச்சொல் நினைவில் கொள்ள முடியாத அளவுக்கு கடினமானதாய் இருக்கும். மேலே உள்ளவற்றில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது Gtalk மட்டுமே. எனவே முதல் முறை உங்களுக்கு வரும் கடவுச்சொல்லை உங்கள் அலைபேசி அல்லது மின்னஞ்சல் முகவரியில் சேமித்து வைக்க வேண்டும். அல்லது எப்போதெல்லாம் உங்களுக்கு Gtalk பயன்படுத்த வேண்டுமோ அப்போது இந்த பக்கத்துக்கு Account Settings பக்கம் மூலம் வந்து ஏற்கனவே உள்ள கடவுச்சொல்லை Revoke என்று கொடுத்து விட்டு ஒரு புதிய கடவுச்சொல் உருவாக்க வேண்டும். இவற்றைக் கொண்டு உங்கள் கணக்கை திருட முடியாது.
இதை Turn Off செய்ய வேண்டும் என்றால் உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்திற்கு செல்லவும். அதில் “Using 2-step verification” என்பதற்கு நேரே உள்ள edit என்பதைசொடுக்கவும் அல்லது “Using 2-step verification” என்பதை சொடுக்கவும். பின்னர் Turn Off 2-Step Verification என்பதை கொடுக்கவும். இப்போ வரும் குட்டி விண்டோவில் OK கொடுத்து விட்டால் OFF செய்யப்பட்டு விடும். எல்லா பயன்பாடுகளுக்கும் பழைய கடவுச்சொல் நீங்கள் பயன்படுத்தலாம்.
புதிய கணினியில் நுழைய முயலும் போது உங்கள் அலைபேசி இல்லை என்றால், அல்லது நெட்வொர்க் பிரச்சினை என்றால் உங்களால் உங்கள் கணக்கில் நுழைய முடியாமல் போகலாம். எனவே யோசித்து செய்யவும்.
சில மற்ற தகவல்கள்:
1. உங்கள் ஜிமெய்ல் கணக்கை கண்காணியுங்கள்
இது எங்கிருந்து எல்லாம் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்து உள்ளீர்கள் என்று காண உதவும்.

Detail என்பதை சொடுக்கினால் ஒரு புதிய Tab/Window வரும் இதில் தேவை இல்லாத,அல்லது புதிய IP, போன்றவை இருந்தால்எல்லா சீசன்களையும் Log-out செய்து விடலாம்.
2. தேவை இல்லாத மின்னஞ்சலில் உள்ள லிங்க்களை சொடுக்காதீர்கள்
உங்களுக்கு தெரியாத நபர் அல்லது மின்னஞ்சல் முகவரியில் இருந்து ஏதேனும் மூணு மாசத்துக்கு முடிவெட்ட ஆயிரம் ரூபாய், உங்களுக்கு 1000$ பரிசு கிடைத்து உள்ளது என்று வந்தால் அவற்றை டெலீட் செய்ய வேண்டியது தான் முக்கிய கடமை. இதில் சில லிங்க்களை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், நம் மின்னஞ்சல் தொடர்பில் உள்ள எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி விடுகிறார்கள் இவர்கள். நம்பிக்கை உள்ள நபர்களிடம் இருந்து வரும் நம்ப முடியாத மின்னஞ்சல்கள் இதை உறுதி செய்கின்றன.
3. எப்படி வைப்பது கடவுச்சொல்/பாஸ்வேர்ட்?
என்னதான் பல வழிகளை கடைபிடித்தாலும் நம் முக்கிய கடமை மற்றவர்கள் எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி கடவுச்சொல் வைப்பது. பிறந்த தேதி,பள்ளி, கல்லூரியின் பெயர், வருடம், பழைய காதலன்/காதலியின் பெயர்(மனைவி அல்லது கணவன் கண்டுபிடிக்காமல் இருக்க,எதை என்பது உங்களுக்கே தெரியணும் ), மனைவி,குழந்தைகள் பெயர், கார் எண். என இவற்றை பயன்படுத்தக் கூடாது. மற்றவை ஏதேனும் எழுத்து, எண்,குறியீடுகள் கலந்து வைக்கலாம். உதாரணம்: (qwerty@500$*india)
4. பொது இடங்களில்(Browsing Center) மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்தலாமா?
இது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு. கண்டிப்பாக இதனை செய்யவே கூடாது. சில இடங்களில் Key Logger என்ற சாஃப்ட்வேர் பயன்படுத்தி நீங்கள் டைப் செய்யும் எல்லாவற்றையும் சேமிக்க வழி உள்ளது. இங்கே இந்தியாவில் அதிகமாக இதை எதிர்பார்க்காவிட்டாலும் மற்ற பிரச்சினைகள் உள்ளன.
7:45 PM |
Posted in
feature,
Google,
Main News,
Security
|
Read More »
file ஒன்றை, இன்னொரு இடத்திற்கு அல்லது வேறு ஒருcomputer-க்குக் கொண்டு செல்ல திட்டமிடுகிறீர்கள். ஆனால் அது அளவில் மிகவும் பெரியதாக இருப்பதால், பிளாஷ் ட்ரைவ் அல்லது வேறு மெமரி சாதனங்களில் பதிய இயலவில்லை.
அந்த வேளையில், பைலைப் பிரித்துப் பின் அவற்றை இன்னொரு கம்ப்யூட்டருக்கு ஒவ்வொன்றாகக் கொண்டு சென்று பதியலாம்.
அனைத்து பிரிவுகளும் பதியப்பட்ட பின்,மீண்டும் அதனை ஒரு பைலாக இணைக்கலாம். இதற்கு உதவிடும் புரோகிராமின் பெயர் HJSplit. இந்த புரோகிராம் இணையத்தில் இலவசமாக டவுண்லோட் செய்திடக் கிடைக்கிறது.
இந்த புரோகிராம் பைலின் அளவு 100 ஜிபி க்கும் மேலாக இருந்தால் கூட அதனைப் பிரித்துப் பின் இணைக்கிறது. இதனை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவை இல்லை.
இணையத்தில் கிடைக்கும் இதன் ஸிப் பைலை டவுண்லோட் செய்து, HJSplit.exe என்ற இந்த பைலை, கம்ப்யூட்டரில் உள்ள ட்ரைவில் பதிந்திடவும். இந்த எக்ஸிகியூடிவ் பைலின் மீது டபுள் கிளிக் செய்து இயக்குங்கள்.
இப்போது கிடைக்கும் Split பட்டனில் கிளிக் செய்திடவும். அடுத்து கிடைக்கும் Input File என்ற பட்டனில் கிளிக் செய்திட வும். பின்னர், நாம் பிரிக்க விரும்பும் பைலைத் தேர்ந்தெடுக்க வசதி கிடைக்கும்.
பைலைத் தேர்ந்தெடுத்த பின்னர், Output என்ற பட்டனில் அழுத்தவும். அதன் பின்னர், எந்த ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப்படும் பைல்கள் சென்றடைய வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். பின்னர், இவை எந்த அளவில் பிரிக்கப்பட வேண்டும் அல்லது எத்தனை பைல்களாகப் பிரிக்கப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
அடுத்து Start பட்டனை அழுத்தவும். உடன் பைல் பிரிக்கும் வேலை மேற்கொள்ளப் படும். பைல் பிரிக்கப் படுவதனை, ஒரு பார் சட்டம் கீழாகக் காட்டும்.
நீங்கள் பிரிக்கும் பைலின் அளவைப் பொறுத்து இந்த பணி மேற்கொள்ளப்படும் காலம் அமையும். முடிவில், ஒரு சிறிய அறிவிப்பு தரப்படும். இதனை அடுத்து, நீங்கள் குறிப்பிட்ட ட்ரைவ் அல்லது போல்டரில், பிரிக்கப் பட்ட பைல் துண்டுகள் இருப்பதனைக் காணலாம்.
இந்த பைல்களுக்கான பெயரில் 001, 002 என இவை துணைப் பெயர்களைக் கொண்டிருப்பதனைக் காணலாம்.
பிரித்த பைல்களை இணைத்தல்: பிரித்த பைல்களை இணைப்பதுவும் எளிது. அவற்றை நீங்கள் கொண்டு செல்ல விரும்பும் கம்ப்யூட்டருக்குக் கொண்டு செல்லவும். மீண்டும் இதே HJSplit.exe பைலை இயக்கவும்.
File Join டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இப்போது Input File என்ற பட்டனில் அழுத்தவும். டயலாக் பாக்ஸில் 001 என்ற துணைப் பெயர் கொண்ட பைல் மட்டுமே காட்டப்படும்.
அந்த பைலைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ச்சியான மற்ற பைல்கள் தானாகத் தேர்ந்தெடுக்கப்படும். எனவே பிரிக்கப்பட்ட பைல்கள் அனைத்தும் ஒரே போல்டரில் இருக்கு மாறு வைத்திடவும்.
அடுத்து Output பட்டனை அழுத்தி இணைக்கப்படும் பெரிய பைல் எங்கு பதியப்பட வேண்டும் என்பதனைக் குறிப்பிடவும். இவற்றை எல்லாம் முடித்த பின்னர், Start பட்டனை அழுத்தவும். இப்போது இணைக்கும் வேலை தொடங்கும்.
மீண்டும் ஒரு ஸ்டேட்டஸ் பார் ஒன்று கீழாகக் காட்டப்பட்டு எந்த அளவில் பிரிக்கப்பட்ட பைல்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.
பைல் துண்டுகள் இணைக்கப்பட்டவுடன், வேலை முடிந்துவிட்டதற்கான அறிவிப்பு செய்தி காட்டப்படும்.
இதற்கான HJSplit என்ற அப்ளிகேஷன் பைலைப் பெற http://www.hjsplit.org/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்
7:49 PM |
Posted in
Software
|
Read More »

என்ன
கலரில் கார் வாங்கலாம் என்று இனிமேல் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ஆம்
தற்போது டொயோட்டாவினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய காரில் அதன்
தோற்றத்தினையே மாற்றக்கூடிய தொடுகைத் திரையுள்ள உடற்பாகம் காணப்படுகின்றது.
Fun-Vii என்பது Vehicle Interactive Internet என்பதன் சுருக்கமாகும். இந்தத் தொழினுட்பம் மூலம் காரின் சாரதியால் மட்டுமே அதன்
வடிவங்களை மாற்றக்கூடிய தொடுதிரை உடற்பாகமுள்ள கார் உருவாக்கப்பட்டுள்ளது.
இக் காரின் சாரதியை அதன் கதவில் ஒரு செய்தியுடன் இந்தக் கார் வரவேற்கும்.
ஒரு நவீன தொலைபேசியோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு இந்தக் கார்
செயற்படும்.
இது எதிர்காலத்தின் டொயோட்டாவின் பார்வையாக உள்ளது. இந்தக் காரினால் உள்ளே அல்லது வெளியே பலதரப்பட்ட படங்களை வெளிப்படுத்த முடியும்.
இன்னும் வேறு மின்னியல் டொயோட்டா கார்களும் வெளியிடப்பட்டுள்ளன. டொயோட்டா
iQ இனை அடிப்படையாகக் கொண்டு ஒரு 4-இருக்கை மின்சார வாகனமான FT-EV III
என்பது வெளியிடப்பட்டுள்ளது. இதில் லிதியம்-அயன் மின்கலம் உள்ளது.
முழுமையாக மின்னேற்றப்பட்ட மின்கலத்தில் 65 மைல்கள்வரை பயணிக்கமுடியும்.
2012 இல் குறுகிய தூரத்திற்குப் பயணிப்பதற்குப் பொருத்தமான EV தொழினுட்பத்துடனான காரினையும் டொயோட்டா வெளியிட எண்ணியுள்ளது.
ஐதரசன் வாயுவைக் கொண்டு பயணிக்கும் வாகனமொன்றையும் டொயோட்டா அளவில் வர்த்தக
ரீதியாக வெளியிடவுள்ளது. இந்த வாகனம் ஒரு குடும்பம் பயணிக்க போதுமாக
ஒருக்குமேனவும் இதனை ஒருமுறை மின்னேற்றினால் 430 மைல்கள் டொயோட்டா பயணிக்க
முடியுமெனவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
7:46 PM |
Posted in
|
Read More »

ஒரு மணி நேர INTERNATIONAL CALL IN SKYPE இலவசமாக பெருவதற்க்கான வழிமுறைகள் இதோ
செய்து CONNECT/ON செய்தபின். உங்களுடைய DEFAULT BROWSER ல் CONNECTION STATUS LOAD அகும்
CONNECT ஆனபின் மற்றொரு பக்கதிற்க்கு REDIRECT ஆகும் .அங்கு START ஐ அழுத்தி
GET FREE VOUCHER NOW க்லிக் செய்தவுடன் உங்களுக்கான இலவச RECARGE VOUCHER CODE வரும்
அதை COPY செய்து கொண்டு.பின் SKYPE தளத்திற்க்கு சென்று LOGIN செய்தபின்னர் இந்த முகவரிக்கு செல்லவும்
(CLICK HERE)பின் அந்த இலவச வவுச்சர் கோட்டை PASTE செய்து REDEEM அழுத்தவும். அவ்வளவுதான் இப்பொழுது உங்கள் SKYPE அக்கவுன்ட் BALANCE ஐ பாருங்கள்.
11:05 AM |
Posted in
feature,
Main News,
Prank And Cons,
Software
|
Read More »

இணையத்தில்
ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்டண மென்பொருட்களும் குவிந்து
உள்ளன. இந்த மென்பொருட்களை தரவிறக்கி நம் கணினியில் இன்ஸ்டால் செய்து
பின்னர் அந்த மென்பொருளின் பயனை உபயோகப்படுத்துகிறோம் அல்லது போர்ட்டபிள்
மேன்போருட்கலாக உபயோகப்படுதுகிறோம். போர்ட்டபிள் வகை மென்பொருட்களை நம்
கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டியதில்லை. நேரடியாக
உகயோகிக்கலாம். மற்றும் நம்முடைய பெண்ட்ரைவில் வைத்து கொண்டு எங்கு
வேண்டுமானாலும் உபயோகித்து கொள்ளலாம். இந்த வகை மென்பொருட்களால் நம்
கணினியில் மால்வேர் பிரச்சினை மற்றும் registry சுத்தமாக இருக்கும்.
போர்ட்டபிள் மென்பொருட்களை டவுன்லோட் செய்வதற்கே ஒரு பயனுள்ள தளம்
உள்ளது. இந்த தளத்தில் பிரபலமான அனைத்து மென்பொருட்களுக்கும் போர்ட்டபிள்
மென்பொருட்கள் உள்ளன.
இந்த தளத்தில் கீழே உள்ள பல்வேறு பிரிவுகளில் மென்பொருட்கள் உள்ளன.
- Accessibility
- Development
- Education
- Games
- Graphics & Pictures
- Internet
- Music & Video
- Office
- Security
- Utilities
போன்ற பிரிவுகளில் மென்பொருட்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிரபலமான
மென்பொருட்கள் அனைத்திற்கும் போர்ட்டபிள் மென்பொருட்கள் இலவசமாக
கிடைக்கும்.
2:23 PM |
Posted in
feature,
Main News,
Software
|
Read More »

எமது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள்.
அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும்.
இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள்.
இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன.
Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்களில் இருந்து தப்பிவிடுகின்றன. கடந்த சில மாதங்களாக இவ்வாறான Phissing மின்னஞ்சல்கள் பரவலாக எல்லோருக்கும் வரத்தொடங்கியுள்ளன.
ஆகவே அடையாளம் தெரியாமல் வரும் மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதுதான் பாதுகாப்பு. அப்படி இல்லை கட்டாயம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது ஒரு வழி
எமக்கு வரும் மின்னஞ்சலின் முகவரியை இந்த தளத்தில் கொடுத்தால் அது பற்றிய சகல விபரமும் கொடுக்கிறார்கள்.


மேலுள்ள படத்தில் காட்டியதை போன்று மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால் அது போலியாக இருந்தால் சிவப்பு நிறத்தில் அடையாளமிட்டு காட்டும். அருகில் உள்ள info என்பதை கிளிக் செய்தால் அந்த மின்னஞ்சல் முகவரி தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்
இந்த தளம் செல்ல Email address Checker
8:07 AM |
Posted in
feature,
Mail,
Main News
|
Read More »
இணையதளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் வார்த்தை மேகக்கணினி அதாவது Cloud Computing. கணினியில் உள்ள ஹார்டிஸ்க் ( Hard Disk)-ல் நம் தகவல்களை சேமித்து வைத்தால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம் இதை தவிர்ப்பதற்காகவும் உலகில் எங்கிருந்தும் எந்த டிவைஸ் மூலம் நம் தகவல்களை பதிவேற்றவும் , பதிவேற்றியதை தறவிரக்கவும் 100 GB இடத்தை இலவசமாக அளிக்கிறது ஒரு முன்னனி தளம் இதைப்பற்றித்தான இந்தப்பதிவு.

நம் வீட்டு கணினி அல்லது அலுவலகக் கணினியில் சேமித்து வைத்திருக்கும் தகவல்களை பாதுகாப்பாகவும் அதே சமயம் எந்த பாதிப்பும் ஏற்படாமல் உலகில் எங்கிருந்தும் பயன்படுத்தும் சேவையை நமக்கு அளிக்க ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : https://www.cx.com
ஆன்லைன் மூலம் இணையதள சேவை கொடுக்கும் நிறுனங்கள் தற்போது Cloud Hosting என்று சொல்லக்கூடிய மேகக்கணினி முறையில் தங்கள் சேவையை விரிவுபடுத்த பல முயற்சிகள் எடுத்து வருகிறது. இதைப்பற்றி விரிவாக பார்க்கும் முன் ஒன்றைப்பற்றி தெரிந்து கொள்ளலாம். எந்த ஆப்ரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும் பரவாயில்லை,விண்டோஸ், மேக், அண்ட்ராய்டு, IOS, மற்றும் பிளாக்பெர்ரி போன்ற அனைத்து இணையவசதி உள்ள மொபைல் மூலமும் நாம் தகவல்களை பாதுகாப்பாக ஆன்லைன் மூலம் சேமிக்கலாம். ஒவ்வொரு நாட்டிலும் உள்ளவர்கள் எளிதாக தறவிரக்கலாம் ஒரு நாட்டில் இணையதளப்பிரச்சினை என்றாலும் அடுத்த நாட்டில் உள்ளவர்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லாம தெரியும் இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேகக்கணினி என்ற பெயர் இதற்கு வந்தது என்று. இப்படி சேவை கொடுக்க அதிகமாக கட்டணம் ஆகும் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேலையில் ஒரு முன்னனி நிறுவனம் Cloud Storage 10GB சேமிக்க இலவச இடம் கொடுக்கிறது. இத்தளத்திற்கு சென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நீங்களும் உங்கள் முக்கியமான தகவல்களை கிளவுட் சேமிப்பு முறையில் பாதுகாப்பாக வைக்கலாம். கணினியே முழுவதும் பாதிக்கப்பட்டாலும் அடுத்த கணினி மூலம் இணையம் வழியாக நம் கோப்புகளை பயன்படுத்தலாம். கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். இதைப்பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
8:47 AM |
Posted in
feature,
Main News,
Utilities
|
Read More »
கணினி பயன்பாட்டு தேவைக்கு வெளியிடப்படும் மென்பொருள்கள் அனைத்துமே windows operating சிஸ்ட்டத்தை சார்ந்தே உள்ளது. இதற்கு காரணம் கணினி பயனாளர்கள் பெருமளவில் windows operating சிஸ்ட்டதை பயன்படுத்துவதே காரணம் ஆகும். இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தப்படும் operating சிஸ்ட்டத்தில் பெருமளவு குறைபாடுகள் உள்ளன. இதில் முக்கியமான குறை என்னவெனில் விண்டோஸ் operating சிஸ்ட்டதை lock செய்யும் வசதி இல்லை. பொதுவாக பயனர் கணக்கு தொடங்கி கடவுச்சொல் இட்டு பயன்படுத்தி வருவோம். இதுபோன்று பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால் கடவுச்சொல் உருவாக்காமல் இருந்தால் என்ன ஆகும். அந்த கணினியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். அந்த கணினிக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை. அவ்வாறு உள்ள கணினிகளில் கோப்புகள், கோளன்களை மறைத்து வைத்து பயன்படுத்தி வருவோம் சில நேரங்களில் operating சிஸ்ட்டத்தையே பிறர் பயன்படுத்தாதவாறு செய்ய நினைப்போம். அதுபோன்று operating சிஸ்ட்டத்தினை lock செய்ய சில மென்பொருள்கள் உதவி செய்கிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் WinLockr.
மென்பொருளை தரவிறக்கம் செய்ய
சுட்டி

மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, மென்பொருளை ஒப்பன் செய்யவும். இந்த WinLockr அப்ளிகேஷனானது portable application ஆகும். பின் விருப்பமான கடவுச்சொல்லை உள்ளிடவும்.

கடவுச்சொல்லை உள்ளிட்டு, பின் எந்த formatஇயங்குதளத்தை lock செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்யவும். கடவுச்சொல் மற்றும் USB என்ற இரு வேறுபட்ட முறைகளில் lock செய்ய முடியும். அடுத்து Lock windows என்னும் பொத்தானை அழுத்தவும். அவ்வளவுதான் விண்டோஸ் இயங்குதளமானது lock செய்யப்படும்.
நீங்கள் கடவுச்சொல் இட்டு இயங்குதளத்தை lock செய்தால், கடவுச்சொல் இட்டால் மட்டுமே open செய்ய முடியும். USB மூலமாக lock செய்தால் USBயை அகற்றினால் மட்டுமே இயங்குதளத்தை பயன்படுத்த முடியும். இவ்வாறு விண்டோஸ் operating சிஸ்ட்டதை lock செய்வதன் மூலமாக பிறர் நமது கணினியை திருட்டுதனமாக அனுகுவதை தடுக்க முடியும். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் USB ட்ரைவினை பயன்படுத்தினால் மட்டுமே lock செய்ய முடியும்.
8:45 AM |
Posted in
feature,
Main News,
Security,
Software
|
Read More »

சர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில் கணினி பயன்பாட்டிற்கு இயங்குதளத்தின் அவசியம் பற்றி அனைவருமே அறிந்திருப்பார்கள்.
ஆரம்பத்தில் மைக்ரோசொஃப்ட் மற்றும் அப்பிள் ஆகிய நிறுவனங்களே இயங்குதள உருவாக்கத்தில் முன்னனியில் இருந்தன. ஆனால் இப்போது லினக்ஸ் அவற்றை ஓரம் தள்ளும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.
அப்படிப்பட்ட இயங்குதளத்தை சாதாரணமாக யாராலும் வடிவமைத்துவிடமுடியாது. கணினி மொழிகளில் அதீத புலமைத்துவமும், கடின உழைப்பும் வேண்டும். அவ்வாறு அல்லாமல் எங்களைபோன்ற சாதாரண கணினி அறிவுள்ளவர்கள் கூட இயங்குதளத்தை வடிவமைக்கக்கூடியதாக இருந்தால் எப்படி இருக்கும்
அதற்கும் இப்போது வழிபிறந்துவிட்டது. ஆம் ஓர் இணையத்தளம் இலகுவாக உங்களை வழிநடத்திச்சென்று உங்கள் விருப்பம்போல் இயங்குதளத்தை வடிவமைக்க உதவுகிறது.


இதற்கு சாதாரண கணினி அறிவு இருந்தாலே போதுமானது. இந்த தளம் செல்ல http://susestudio.com/
8:43 AM |
Posted in
feature,
Internet,
Main News,
Software
|
Read More »
எமது உள்ளூர் பஸ் சேவைகளில் பிரயாணம் செய்தவர்களுக்கு இதுபோன்றதொரு பஸ் கிடைத்தால் எப்படியிருக்கும்! 23 பயணிகள் மட்டும் பயணம் செய்யக்கூடிய இந்த பஸ்ஸில் சொகுசு கார்களில் பிரயாணம் செய்யும் அனுபவம் ஏற்படும்.



முன்புறமும், பின்புறமும் பார்பதற்கு கார் போலவே இருந்தாலும் நீளத்தில் புகையிரதம் போன்றது. 49 அடி நீளமான (15 metres) இந்த பஸ் 155 kmph எனும் அதியுயர் கதியில் செல்லவல்லது.
அத்துடன் தன்னியக்கமாக திறக்ககூடிய 8 கதவுகளையும் கொண்டுள்ளது. Holland இலுள்ள University of Technology இல் 1985 ஆம் ஆண்டே இதற்கான வடிவம் வரையப்பட்டதாகவும் இன்று தான் அது முழுமைபெற்றதாகவும் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
12:31 PM |
Posted in
feature,
Main News,
New Inventions
|
Read More »

அருமையான கண்டுபிடிப்பு
6:52 PM |
Posted in
Main News,
Security
|
Read More »
ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா?கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்? இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் பார்ப்போம்.
1.டிஸ்க் டிக்கர் (Disk Digger) :கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.மீண்டும் பார்மட் செய்யப்பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம்.

2.ரெகுவா(Recuva) :இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. இது உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது. எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.

தரவிறக்கம் செய்ய : Download
9:20 PM |
Posted in
feature,
Main News,
Software
|
Read More »

நாம இணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். நான் நினைத்தேன் இவங்க ஒரு கையாள கேமராவ புடிச்சுகிட்டு மறு கையாள இந்த டுடோரியல் எடுக்கறாங்கன்னு. ஆனா இப்போதான் மேட்டர் தெரிஞ்சுது அதுக்கு கேமரா எல்லாம் வேண்டாம்னு. என்னனு பார்ப்போமா?
இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும் ஒன்று.
1. Freez Screen Video Caputre
2. HyperCam
3. http://camstudio.org/
4. http://www.totalscreenrecorder.com/
இந்த நான்கில் நான் பயன்படுத்துவது முதலாவது. (ஏன்னா அது ப்ரீ). நல்ல தரமான வீடியோவும் கிடைக்கிறது.இதை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
சரி எப்படி ரெகார்ட் செய்றதுன்னு கேக்குறீங்களா?
ரெகார்ட் செய்வதற்கு முன் ஒரு சிறு வேலை.
இந்த Software Open செய்து Option என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ Quality 100 என வைத்துக் கொள்ளவும். மற்றவை மாற்ற வேண்டியது இல்லை.
நீங்கள் எதை ரெகார்ட் செய்ய விரும்புகிறீர்களோ அதற்கு முன் இதை ஆரம்பித்து உங்கள் ரெகார்ட் வேலையை ஆரம்பிக்கவும். இதனால் சில நொடிகளுக்கு இந்த சாப்ட்வேர் உங்கள் முகப்பில் தோன்றும். ரெகார்ட் கொடுத்த உடன் ஸ்க்ரீன் அளவு செட் செய்ய ஒரு + போன்ற குறி வரும் அதனை முழு ஸ்க்ரீன்க்கும் சதுரம் போல அமைத்து இழுத்து விட்டால் ரெகார்ட் ஆரம்பிக்கும்(உங்கள் சாப்ட்வேர் விண்டோ மட்டும் கூட நீங்கள் + மூலம் அளவுபடுத்தி ரெகார்ட் செய்யலாம்.). ரெகார்ட் செய்ய ஆரம்பித்த உடன் இதனை Minimize செய்து விடவும்.
நீங்கள் உங்கள் வேலை முடிந்த உடன் ஸ்டாப் பட்டன் கொடுத்து விட்டால் தானாகவே இது வீடியோ ஆக Save ஆகிவிடும். உங்கள் வீடியோவை இப்போது Youtube இல் Upload செய்து உங்கள் வாசகர்களுக்கு வீடியோ டுடோரியல் சொல்லிக் கொடுங்கள். வீடியோ சைஸ் மிக அதிகமாக இருக்கும் (எனது இந்த ஒரு நிமிட வீடியோ 375MB )எனவே ஏதேனும் Video Converter பயன்படுத்தி வேறு Format மாற்றுவதன் மூலம் சைஸ் குறைக்க முடியும்.கவனிக்க வீடியோ Resolution 1280X720 என்று இருப்பது நலம். AVI வீடியோ ஆக Convert செய்வது நல்லது. (After Conversion 30MB)
9:17 PM |
Posted in
feature,
Main News,
Software
|
Read More »
நண்பர்களே நீங்கள் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது நீங்கள் உங்கள் நண்பருக்கு திட்டி மெயில் அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்திர்கள் என்றால் அது முடியும் ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. சரி அடுத்த விநாடி திரும்ப பெற வேண்டும் என்றால் நான் முதலில் கூறியது போன்றது இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும்.ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.

அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன உரிமை கிடைக்கும்.
9:15 PM |
Posted in
feature,
Mail,
Main News
|
Read More »
தொழில் நுட்பத்தில் வளர்ந்து வரும் உலகில் அனைவருமே இணையதளங்களை தொடங்கி தங்கள் கருத்துகளை உலகிற்கு தெரிய படுத்துகின்றனர் . அதுவும் இலவசமாக நமக்கு இணையயதளங்களை தொடங்குவதற்கு பல இணையதளங்கள் இருக்கிறன .இதில் சில தளங்கள் மட்டும் தான் நல்ல சேவையினை நமக்கு தருகிறது .நாம் நம் எண்ணங்களை மொபைல் இணையதளங்களை உருவாக்கி உலகிற்கு தெரிய படுத்தலாம்.
இந்த வசதியினை நமக்கு இலவசமாக தருவதுWAPKA.MOBIஎன்னும் ஒரு மொபைல் இணையதளம் .இந்த தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு கணக்கை தொடங்கி இதில் MP3 SONGS,VIDEO SONGS , WALLPAPERS, THEMES, GAMES, APPLICATIONS, TEXT SMS,LINKS,TRIKS,LIVE TV,TAMIL SONGS என்று பல்வேறு பக்கங்களை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் .
YOUENAME.WAPKA.MOBI YOURNAME என்ற இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரில் CREATE WAPKA.MOBI உருவாக்கி கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு அந்த தளத்திற்கு சென்று TERMS & CONDTION ஐ படித்து தெரிந்து கொள்ளவும் . புதிய மொபைல் இணையதளத்தை தொடங்குவதற்கு REGISTRATION செய்து கொண்டு தொடங்குங்கள்
6:34 PM |
Posted in
feature,
Main News,
Mobile
|
Read More »
பேஸ்புக்கின் பல புதிய வசதிகளை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று தான் timeline எனப்படும் பேஸ்புக்கின் புதிய தோற்றம் இந்த புதிய தோற்றம் கண்டிப்பாக அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதியை இப்பொழுது Developer மட்டும் வழங்கி உள்ளது. அதை உங்கள் கணக்கிலும் அந்த புதிய மாற்றத்தை,தோற்றத்தை கொண்டு வருவது எப்படி என பார்ப்போம்.
- இதற்க்கு முதலில் Facebook Developer இந்த லிங்கில் செல்லவும்.
- உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு விண்டோ வந்தால் அதில் உள்ள Allow கொடுத்து உள்ளே செல்லவும்.
இனி கீழே ஒவ்வொரு படத்திலும் குறிப்பிட்டு காட்டி இருக்கும் படி செய்யுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் App Display Name, App namespace போன்ற இரு பகுதி இருக்கும் அதில் உங்களுக்கு தோன்றிய பெயரை கொடுக்கவும். அதில் App Namespace என்ற இடத்தில நீங்கள் கொடுக்கும் பெயர் Available என்று பச்சை நிறத்தில் வரவேண்டும்.

- அடுத்து Security Check என்ற பகுதியில் verification code நிரப்ப சொல்லும் அதை சரியாக கொடுத்து submit பட்டனை அழுத்தவும். அடுத்து உங்களுடையை App ரெடியாகி விடும்.
- அந்த விண்டோவில் உள்ள Open Graph என்ற லிங்கை அழுத்தவும்.
அதில் உள்ள சிறு கட்டங்களில் ஏதோ ஒன்றை கொடுத்து Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.அதில் கடைசியில் உள்ள Save Changes என்ற பட்டனை அழுத்தவும்.
இதற்க்கு அடுத்து ஓபன் ஆகும் இரண்டு விண்டோக்களிலும் இதே பட்டனை அழுத்தவும். முடிவில் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- மேலே இருப்பதை போல விண்டோ வந்தால் இதுவரை நீங்கள் செய்த அனைத்தும் சரியே. இப்பொழுது உங்கள் பேஸ்புக்கின் முகப்பு பக்கத்திற்கு செல்லுங்கள்.
- உங்கள் பேஸ்புக்கின் புரொபைல்பக்கத்திற்கு செல்லுங்கள். உங்களுக்கு ஒரு அறிவிப்பு செய்தி இருப்பதை காண்பீர்கள்.

அந்த பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே உங்களின் பேஸ்புக் கணக்கு புதிய தோற்றத்தில் மாறிவிடும். சில கூடுதல் வசதிகளையும் பெறலாம்.
இந்த புதிய தோற்றம் Developer பிரிவில் சேர்ந்துள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு பழைய தோற்றம் தான் தெரியும்.
8:23 PM |
Posted in
Facebook,
feature,
Main News
|
Read More »